உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

141

அகத்தோடு புறத்தை இணைத்துக் காட்டும் ஓர் அகப்பண்பு. மனிதன் செயல்கள் புற இயற்கையுடன் முரணுகின்ற கால, இடச் சுழல்களைக் காட்டி அது மனிதனுக்கு நன்மை, தீமைபற்றிய அறிவை உண்டு பண்ணுகிறது.

தீமை அல்லது துன்பம் ஓர் அகப்பண்பு என்று கண்டு, அதன் குறுகிய எல்லையையும் பாரிய விளைவுகளையும் உணர்பவர்களுக்கு, அது ஒரு தீய பண்பாகவே இராது. ந ன்மையைப் போலவே அது ஒரு நல்ல பண்பாகவும் நன்மையைவிடப் பயன் தரும் நற்பண்பாகவும் அமைகிறது. நன்மையைப்போலவே அது ஒரு தற்காலிகப் பண்பு. ஆனால் நன்மையைப் பெருக்கும் வகையிலும் தீமையைக் குறுக்கும் வகையிலும் அது எச்சரிக்கை தந்து, நிலையான இன்பத் தையும் அமைதியையும் அடைய வழிவகுக்கிறது. அது சிறு பண்பாயினும் பாரிய மலையைச் சிறுகச் சிறுகத் தகர்க்கும் சிற்றுளிபோல, பெரும் பயன் தரும் சிறுபண்பு ஆகும்.

அகப்பண்புகளிலே தீமைதரும் தீயபண்புகளையும், நன்மை தரும் நற்பண்புகளையும் புறத்தே நிகழும் இன்ப துன்பங்களால் கண்டு, அவற்றின் நிலையான இயல்புகளையும் காரணகாரியத் தொடர்புகளையும் கண்டுணர்வதாலேயே நன்மை தீமை பற்றிய அறிவு வளர்கிறது. இவ்வாறினால் தீமைகளைப் படிப்படியாக முற்றிலும் விலக்கமுடியும். நன்மைகளைப் படிப்படியாக முற்றிலும் வளர்க்க முடியும். முழுநிறை நன்மை அல்லது நல்லாற்றல் நோக்கிச் செல்லும் நெறி இதுவே.

தீமை நிலையான பண்பு மன்று, தீயபண்பு மன்று. அது தற்காலிகமான பண்பு, திருத்துகிற பண்பு, ஆனால் திருத்து கிற பண்பாக அது அமையத் தீமையைப்பற்றிய அறிவு ஏற்படுதல் இன்றியமையாதது. ஏனெனில் நன்மை வளர்வது நன்மை யாலல்ல; தீமை பற்றிய அறிவினால்! தீமைக்கு நாம் அடிமைப் பட்டிருப்பதன் காரணம் தீமை பற்றிய அறியாமையே. எனவே னிமனிதன் அறியாமையால் ஏற்படும் தீமையன்றி, இயற்கையின் எல்லையற்ற பரப்பில் வேறு தீமை கிடையாது. தீமை பற்றிய அறிவு ஏற்படத் தொடங்கிய நாள் தொட்டுத் தீமை குறைந்தே தீரும். நன்மை வளர்ந்தே தீரும். இத்தகைய நன்மை, நன்மை தீமை என நாம் முன்பு வகுத்துணர்ந்த தற்செயலான