உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(148) ||

அப்பாத்துரையம் - 43

>>

அமைந்து, எண்ணங்களைக்கொண்டே கட்டமைக்கப்படுகிறது என்பது புத்தர் பெருமான் திருமொழி. புற நிகழ்ச்சிகளுக்கு அகத்தே காரணம் காண்பது தவறு என்பதை இவ்அறமொழி வலியுறுத்துகின்றது. ஒருவன் கிழ்ச்சியுடையவனாயிருக்கிறா னென்றால், அதற்குக் காரணம் அவன் மகிழ்ச்சியுடைய எண்ணங்களில் ஈடுபட்டிருந்தான் என்பதே. அதுபோல ஒருவன் சோர்வும் தளர்ச்சியும் துன்பமும் உடையவனாயிருக்கிறா னென்றால், அதற்குக் காரணம் அவன் மகிழ்ச்சியுடைய எண்ணங்களில் ஈடுபட்டிருந்தான் என்பதே. அச்சமுடைமை, அச்சமின்மை, மடமை, அறிவுடைமை, கலக்கம், அமைதி ஆகிய எத்தகைய பண்பின் அகத்தில்தான் இருக்கிறது; புறத்திலன்று.

மூலகாரணமும்

“புற நிகழ்ச்சிகள் யாவற்றுக்கும் அகந்தான் காரணம் என்று கூறுகிறீர்களே, புறப்பண்புகள் எதுவும் புற நிகழ்ச்சிகளையோ, அக நிலையையோ சிறிதும் தாக்குவதில்லையா?” என்று சிலர் கேட்கலாம். புறப்பண்புகளுக்குச் செயல் மதிப்பு முற்றிலும் கிடையாது என்று நாம் கூறவில்லை. ஆனால் அவற்றின் செயல் விளைவுகள் அறிவுடைய மனிதனின் செயலுக்குப் பிற்பட்டவை; மனிதன் அகப்பண்புகள் செயலாற்றாமலிருந்து அவற்றை இயங்கவிடும்போதுதான் அவை செயலாற்றும் என்பதை நாம் உறுதியாக, ஆராய்ந்து முடிபு கட்டிய மாறாமுடிபாகக் கூறமுடியும். எண்ணங்களின் இயல்பு, பயன், ஆற்றல் ஆகியவற்றை ஒருவன் அறியாத போதுதான் புற நிகழ்ச்சிகள் தன் செயலை இயக்கும்படி ம்படி மனிதன் விட்டு விடுகிறான். அத்தகைய நிலையில்தான் தன் வாழ்க்கையைப் புறப்பண்புகள் அல்லது நிகழ்ச்சிகள் ஆக்கவோ, அழிக்கவோ முடியும் என்று மனிதன் “நம்புகிறான்.”

""

'நம்புகிறான் என்ற சொல் இங்கே பொருள் பொதிந்த நிறைச்சொல் ஆகும். புறப்பண்புகளின் ஆக்கும் திறம் இந்நம்பிக்கையின் பயனாகவே ஏற்படுகிறது. அவை உண்மையில் உயிரிலாப்பண்புகள். வேறு உயிர்ப் பண்பு தலையிடாதவிடத்தில் அவற்றினூடாக இயங்கும் தெய்வப்பண்பு உயிர் செயலாற்றும். ஆயினும் தெய்வப்பண்பு உயிரிலா பண்புகளினூடாகச் செயலாற்றுவதைவிட மிகுதியாக பண்புகளினூடாகச்