உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தன்னலங்கடந்த அன்புப்பேறு

கலைமன்னன் மைக்கேல் ஏஞ்சலோவின் கண்களில் கல்லின் பாரிய பாளங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பண்பமைந்த தெய்விகச் சிலையாகத் தோற்றிற்று என்று கூறக் கேட்கிறோம். அத்தகைய பண்பமைந்த உள்ளம் இருந்ததனால்தான், அவன் கண்களும் அத்தகைய பண்பைக் கண்டன. அதனால்தான் அவன் கைகளும் அத்தகைய பண்பைச் செய்து காட்டின. வாய்மை நெறிநிற்கும் கடவுட் பற்றாளன் கண்களில் உலகின் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மனிதனும் கலைமன்னன் கண்ட உருவமையாக் கருங்கற் பாளங்களே! பற்றார்வம் என்னும் கண்ணால் அவற்றிடையே தம் அகப்பண்பின் நிழலைக் கண்டு, மன அமைதி, பொறுமை, இடைவிடா முயற்சி ஆகிய உளி கொத்துளிகளைக் கைக்கொண்டு உழைத்தால், அக்கற் பாளங்கள் யாவும் பண்பட்ட அழகுச் சிலைகளாய்விடும்.

ஒவ்வொருவர் உள்ளத்தினுள்ளும் அன்புத் தெய்வத் தின் பேரொளி நிலவுகின்றது. ஆனால் அதைச் சுற்றிலும் அடிக்கடி ஒளியூடுருவவிடாத திண்ணிய மாசு படர்ந்து, அடர்த்தியாகி, அதை மறைத்துக் கொண்டிருக்கிறது. உள்ளே யிருக்கும் ஒளியில் கறையில்லை. அது அணையாது, அழியாது. அதுவே மனிதனிடம் அமைந்த வாய்மைக் கூறு. ஆனால் அழியும் தன்மையுடைய புறத்தேயுள்ள திண் பொருள் தற்காலிகமாகவேனும் நம்மகத்தேயுள்ள அந்த அழிவிலா ஒளியை மங்கவைக்கவும் மறைக்கவும் முடிகிறது.

இப்புறத்தோட்டின் கறையைப் படிப்படியாய் அகற்ற ஒருவன் அரும்பாடு படவேண்டும். அதன் கரடுமுரடான பகுதிகள் வழவழப்பாக்கப்பட வேண்டும். திண்ணிய பகுதிகள் மேன்மையாகி ஒளியுருவத் தக்கதாக்கப் பட வேண்டும். தேவையற்ற கூறுகள் சிற்றுளியால் சிறிது சிறிதாகப்