உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

அப்பாத்துரையம் - 45

அமைப்பின் பண்பு பொருளியல் முறையில் மாறு பட்டபோது தம் பழைய குடிஉயர்வைப் புதிய முதலாளித்துவ உயர்வாகப் பேணினர். போர் முதலாளித்துவம், நில உரிமை

முதலாளித்துவம், சமய குரு முதலாளித்துவம், வணிக முதலாளித்துவம், தொழில் முதலாளித்துவம், இயந்திர முதலாளித்துவம், பண முதலாளித்துவம் முதலிய படிகள் வடிவிலும் ஆதிக்கப் பண்புவகையிலும் வேறுபட்டவையாயினும், மரபில் ஒரே வகுப்பின் கால இடச் சூழல் மாறுபாடுகளே யாகும்.

பழங்கால அடிமைகளுக்கும் இன்றைய தொழிலாளர் இனத்துக்கு மிடையே இதுபோலவே சூழல் மாறுபாடு மிகுதி இருந்தாலும், இரண்டும் ஒரே மரபுதான் என்பதைக் காண்பது அரிதன்று. இந்தியாவில் இதை நாம் தெளிவாக அறியமுடிகிறது. ஏனெனில் அங்கே ஒவ்வொரு முதலாளித்துவ கால உயர்வு தாழ்வுகள் தனித்தனி சாதிகளாகப் பிரிந்தே இயங்குகின்றன. ஆனால் மேனாடுகளில்கூட இந்நிலையில் அடிப்படை மாறுபாடுகள் இல்லை. முதலாளி வகுப்பிலிருந்து தொழிலாளி வகுப்புக்கு ஒருவர் வீழ்ச்சி யடைவதோ, தொழிலாளி வகுப்பிலிருந்து முதலாளி வகுப்புக்கு உயர்வு பெறுவதோ இங்கும் தனிமனிதருக்குரிய ஒரு நிகழ்ச்சியேயன்றிச் சமுதாயத்துக்குரிய பொதுச் செய்தி அல்ல.

முதலாளி தொழிலாளி மரபுகள்

முதலீட்டின் முதல் வடிவம் நில முதலாளியின் நிலமுதலீடும் வணிகரின் பொன் முதலுமேயாகும். வட்டித் தொழிலில் முனைந்த முற்காலப் பணமுதலாளிகளிடம் து தொடக்கத்தில் புதை பணமா யிருந்து, பின் வட்டி தரும் கடன் முதலாகச் செயலாற்றிற்று. தொழில் முதலாளியின் கையில் விடுமுதல் அல்லது முதலீடாகச் செயலாற்றுகிறது.

து

வணிக முதலாளி பயன் மதிப்பாளரிடமிருந்து ஆதாயம் பெறுவதே தன் நோக்கம் என்று கூறுகிறான். தொழில் முதலாளியும் இதுபோலவே ஆதாய நோக்கம் கொண்டவனாயிருக்கிறான். ஆனால் அவன் தன் ஆதாயத்தை ஆதாயம் என்று அவ்வளவு வெளிப்படையாகக் கூறுவதில்லை. அதைத் தன் தொழிலில் வரும் ஊதியம் அல்லது வருவாய் என்று கூறிக்கொள்கிறான்.வணிகன்,