உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

33

தான் சமூகத்தின் தேவைகள் வளங்கள் கண்டு கைமாற்றுத் தொண்டு செய்வதாகவும், அதற்கான கைம்மாறாகவே ஆதாய உரிமை பெறுவதாகவும் வாதமிடுகிறான். ஆனால் தொழில் முதலாளியின் வாதம் இதைவிடத் திறமையானது. அவன் தொழிலாளர்க்குரிய கூலியைக் கொடுக்கிறான். தன் முதலீட்டின் மூலம் தன் தொழிலை வளர்க்கிறான். அதனால் ஏற்படும் வளர்ச்சியின் பயனை அவன் நுகர்கிறான். இதில் வணிகர் ஆதாயத்தைவிட மிகுதி நேர்மை இருப்பதாகவே மேலீடாகப் பார்க்கும் எவருக்கும் தோற்றும்.

ஆனால் உண்மை இதுவன்று

வணிகன் சரக்குகளை வாங்கி ஆதாயம் பெற்று, அச் சரக்குகளை இயக்கும் ஆற்றல் பெறுகிறான். அதன் மூலம் சமூகத்தையும் இயக்கும் ஆற்றலை அவன் ஓரளவு பெறமுடிகிறது. ஆனால் தொழில் முதலாளி வணிக முதலாளியைவிட எத்தனையோ மடங்கு திறமை வாய்ந்தவன். ஏனென்றால் அடிமைகளை வாங்கி வாணிகம் செய்த அடிமை முதலாளியின் மரபில் வந்தவன் அவன். ஆயினும் காலமுன்னேற்றத்திற்கேற்ப, அவன் உழைப்பாளியின் முழு வாழ்வையும் விலைக்கு வாங்குவதில்லை. அவன் நாள் உழைப்பு அல்லது வார உழைப்பை மட்டுமே அவன் விலைக்கு வாங்குகிறான். பழைய அடிமைகள் முழு நேர அடிமைகள் என்று கூறலாமானால், இப்புதிய வகையைக் குறைநேர அடிமை என்று கூறலாம்.

முழுநேர அடிமையைவிடக் குறைநேர அடிமை குறைந்த கொடுமையுடையது என்று எவரும் கருதக்கூடும். தனிமனித சுதந்திரம் புதிய அடிமைக்கு அதாவது தொழிலாளிக்கு உண்டு என்ற அளவில் அது உண்மையே. ஆனால் நேர்மையை நோக்கமாகக் கொண்டு பார்த்தால், பழைய அடிமையைவிட இப்புது நாகரிக அடிமைத்தனம் மோசமானது என்று காணலாம். அடிமைகளின் நிலை விலைக்கு வாங்கப்பட்ட விலங்குகளின் நிலையைவிட மோசமானதன்று. அடிமையின் உழைப்புக்குரிய அடிமை முதலாளி, அவன் வாழ்வு மாள்வுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறான். ஆடு, மாடுகள் வாழ்வு வளர்ப்பவன் நலத்துக்குரியது. அதுபோலவே அடிமை வாழ்விலும் அடிமை