உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

அப்பாத்துரையம் – 45

மூலப்பொருளின் விலை மதிப்பு, கருவிகளின் விலைமதிப்பு, தொழிலாளியின் உழைப்புமதிப்பின் பகுதியான பிழைப்பூதியம் வாழ்க்கையூதியம் ஆகியவை அடங்கியுள்ளன. இவற்றுள் பொருளின் விலைமதிப்பும் கருவிகளின் மதிப்பும் அவற்றை முன்பு செய்த தொழிலாளிகளின் உழைப்பேயாகும். முதலாளி இவற்றை யெல்லாம் விலை கொடுத்து வாங்கினான். ஆயினும் அக்கொள் விலையில் அவனுக்கு ஆதாயம் கிடையாது. பண்டமாற்றுப் போன்ற சரிசம மதிப்புக் கொடுக்கல் வாங்கல் மட்டுமே செய்ய முடிந்தது. ஆனால் தொழிலாளியின் உழைப்பைக் கொள்முதல் செய்வதன்மூலம் அவன் பழைய அடிமை வாணிகத்தின் ஒரு புதிய வடிவை உருவாக்கி, அதனால் ஆதாயமடைய முடிந்தது. இதுவல்லாமல் தொழிலிலோ, தொழிலூதியத்திலோ அவனுக் குரிய பங்கு எதுவும் இருக்கமுடியாது. இதனால் மிகைமதிப்பு என்றும் தனக்கே உரியது என அவன் உரிமை கொண்டாடினான்.

தனி உடைமைச் சமூகம் உழைப்புமதிப்பே செல்வம் என்பதை மறந்து, பொருளின் உடைமையே செல்வம் என எண்ணியதனால், உழையாது பொருளை முதலிடுவோர்க்கும் ஆதாயம். வட்டி, வருவாய் உரியது என நம்பத் தொடங்கிற்று. முதலாளித்துவ சமுதாயம் இந்த நம்பிக்கை அடிப்படையாகவே அமைந்தது.

உழைப்புமதிப்பே விலைமதிப்பு என்பது உண்மையானால் சரக்கின் விலையில் எந்தப் பகுதியும் சமூக முறையில் இன்றியமையா உழைப்பில் ஈடுபடாத முதலாளிக்கு உரியதல்ல என்று கூற வேண்டுவதில்லை.

சமுதாயம்

தொடக்கத்திலிருந்தே

முதலாளித்துவ சமுதாயம் முதலாளிகளுக்கு அதாவது ஆதிக்கவாதிகளுக்கு வாய்ப்பளிக்கும் முறையில் அமைக்கப் பட்டிருக்கிறது. அச் சமுதாயத்தின் சமயம், ஒழுக்கமுறை, கோட்பாடுகள் யாவும் இந்தச் சமூக அமைப்பின் அடிப்படையிலேயே எழுந்தவை. ஆயினும் இம் முதலாளித்துவ அமைப்பு இயற்கை அமைதிக்கு மாறானது. அது எவ்வளவு உறுதியான கட்டுமான முடையதாயினும் கீழே சமத்துவ மின்மை, சமய சந்தர்ப்பமின்மை, தனிமனிதன் சுதந்திரமின்மை ஆகிய ஈரமணல் மீதே அது கட்டமைந்துள்ளது. இந்த அடிப்படை வலுக்குறைவை மறைக்க, முதலாளித்துவ அறிஞர் சமூகத்தின்