உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கார்ல் மார்க்ஸ் எழுதிய முதலீடு

43

இயல்பான பல தீமைகளை வலுப்படுத்தும் முறையில் புதிய தத்துவங்களை உண்டுபண்ணித் தம் முதலாளித்துவத் தலைவர்களுக்கு ஆதரவு தேட முனைந்துள்ளனர். தொழிலாளர் சார்பாக, முதலாளியிடம் கேள்விகள் கேட்கப்பட்டால் இவற்றையே முதலாளிகளும் மறுமொழியாக வழங்குவர்.

அவர்கள் வாதம் கீழ்வருமாறு நடைபெறக்கூடும். முதலாளித்துவ அறிஞரின் வாதம்

தொழிலாளர் நண்பர் : தாங்கள் உழைக்காமல் உழைப்பவர் உழைப்பின் பயனைக் கவர என்ன நியாயம் இருக்கமுடியும்?

முதலாளி : என் ஆதாயம் கருதித்தானே நான் முன்கூட்டிப் பணத்தை முதலீடாகப் போட்டேன்? என் முதலீட்டின் விளைவை நான் எடுத்துக்கொள்வதில் என்ன தடை?

தொ.ந.: உங்கள் முதலீட்டின் விளைவா, உழைப்பாளியின் உழைப்பின் விளைவா?

மு:(சிறிது தயங்கி) உழைப்புக்கும் அதில் பங்கு கட்டாயம் உண்டு. அதற்காகத்தானே அவர்களுக்குக் கூலிகொடுக்கிறேன். (சிறிது ஆழ்ந்து சிந்தித்து) அத்துடன், எங்களுக்கு ஆதாயமும் வரலாம். நட்டமும் வரலாம். அவர்களுக்குக் கட்டாயம் கூலி கொடுத்துவிடுகிறோமே!

தொ.ந. : நட்டம் வந்தால் என்று கூறாதீர்கள். ஆதாயத்தில் குறைவு ஏற்பட்டால் என்று கூறுங்கள். ஏனெனில் ஆதாய மில்லாத நட்டநிலை வந்தால், தொழிற்சாலையை நீங்கள் மூடிவிடுவீர்கள். இதுவரை கிடைத்த ஆதாயம் போதுமென்று. அவர்கள்.

மு : இதென்ன விதண்டாவாதம் ஐயா! மரம் வைத்தவன் பழம் பறிக்கிறான். வையாதவன்..

தொ.ந. : யார் மரம் வைப்பவர் ஐயா, உழைப்பவரா. உழையாதவரா?

மு : (கோபத்துடன்) மரம் நாங்கள் வைக்கிறோம். உழைப்பவர் நீர் ஊற்றுகிறார்கள். அவர்கள் உழைப்பை முதலிட்டு வாங்கி, அதன் மூலம் தானே தொழில் வளர்க்கிறோம்.