உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருஉ முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை பட்ட திண்ணியவாளினை உடையராய் நெய்யைக் கக்கு கின்ற திரிக்குழாரினாலே பாவையின் கையில் அமைந்த விளக்கின் சுடம் குறையுந்தோறக திரியைக் கொளுத்தி எரிக்கின்றார்கள்; குதிரை முதலியன உறங்குதலின் அவற்றின் கழுத்திலே கட்டப்பட்ட மணியின் ஓசையும் அடங்கிப்போன நடுபாடித்தில் மெய்காப்பாளர் தூக்க மயக்கத்தால் அசைந்து காவலாகம் சுற்றித் திரிகின்னார் கள்; இங்ஙனம் ஈடுயாயம் ஆதலும், பொழுது அளநகறி வோர் தலைவன் எதிரே வந்துநின்று வணங்கி வாழ்த்திக் கடாரத்து நீரிலேயிட்ட நாழிகை வட்டிலாற பொழுது இவ்வளவாயிற் றென்று அறிவிக்கின்றார்கள்; அதனைக் கேட்டவுடன் அரசன் எழுந்து, யவனர்களாலே புளிச் சங்கிலிவிட்டு அழகிதாக அமைக்கப்பட்ட இல்லின் உள்ளே விளக்கங்காட்டப்படச் சென்று, வலிய கயிற் றால் இடையிலே திரையை மறித்து வளையக்கட்டி முன் ஒன்றும் பின் ஒன்றுமாய் இரண்டாக வகுக்கப்பட்ட பள்ளி அறையிற் போய் படுக்கையின் அர்த்திருக்கின் றன்; அங்ஙனத் தலைவன் பள்ளிகொள்ளும் உள்ளறை யின் முன் திரைக்குப் புறத்தே யுள்ள வெளியறையிலே சட்டையிட்ட மிரிசைதில் ஊடைகள் தலைவன் பள்ளி பறையைச் சூழ்ந்து இருக்கின்றர்கள்; அரசனோ நாளைக் செய்யவேண்டும் போரினை மிக விரும்பி அதனாற் படுக்கையில் உறக்கங் கொள்வானாய் முன் நாட்களில் நடந்தபோரிற் புண்பட்ட யானைகளை நினைந்தும், யானை யை வெட்டியுரு தமக்கு வெற்றியினை யுண்டாக்கியும் இறந்துபோன போர் பிறவரை நினைந்தும், அம்பு அழுந் திய வருத்தத்தால் தீளிகொள்ளாமல் காதைச் சாய்த்துக் கொண்டு கலங்குங்குதிரைகளை நினைத்தும் மிகுந்த இரக் கும்