உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

1 இளங்குமரனார் தமிழ்வளம் நிலை ‘அடக்கம்' எனப்படும். 'இஃது இஃது இன்னார் அடக்கமான இடம்' என்பது வழக்காறு.

ஐம்புலன்களை அடக்கும் அடக்கத்தில் இருந்து, மூச்சையே அடக்கி நிறுத்தி விடும் இவ்வடக்கத்திற்குப் பொருள் விரிவாகி யது. ‘அடக்கம் செய்தல்' எனப் புதைத்தலைக் கூறும் வழக் குள்ளதை அறிக. 'ஒடுக்கம்' என்பது காண்க.

அடித்தல் - கிடைத்தல், உண்ணல், வெதுப்பல், அசைத்தல்

க்

அடித்தல் என்பது அடித்தலாம் வினையைக் குறியாமல் பரிசு அடித்தது என்பதில் கிடைத்தல் பொருளில் வருகிறது. “வயிறு நிறைய அடித்து விட்டேன்” என்பதில் உண்ணற் பொருள் அடித்தலுக்கு உண்டாகின்றது. 'காய்ச்சல் அடித்தல்’ போன்றனவற்றில் அடியாத அடி அடியாகின்றது.

அங்கு வெயிலடித்தல் போல் வெப்பப் பொருள் தந்தது. வயிற்றில் அடித்தல் என்பதிலோ பட்டுணி போடுதலைக் குறிப்ப தாயிற்று. எதில் அடித்தாலும் வயிற்றிலடித்தலாகாது. கண் ணடித்தலோ அசைத்தல் பொருளது.

அடிப்பொடி - தொண்டர்

அடி - காலடி; பொடி - தூசி தூள். காலடியில் பட்ட தூள்; எனப் பொருள் குறித்தாலும், அடிபட்ட இடத்தில் உள்ள மண்ணை எடுத்து வழிபடும் பொருள்போலப் பூசிக் கொள்ளு வாரை அடிப்பொடி என்பர். சிவனியர்க்குப் பொடி மாலியர்க்குப் பொடி - திருமண்.

-

தொண்டரடிப்பொடி யாழ்வார் நாலாயிரப்பனுவலார். கம்பன் அடிப்பொடி கணேசனார் அணித்தே வாழ்ந்தவர்.

அடிவிலை ஊன்விலை

திருநீறு;

மாடு விற்பதற்காகத் தாம்பணிக்குக் கொண்டு செல்வர். அங்குக் குறைந்த விலைக்குக் கேட்டால், “அடிவிலைக்குக் கேட் கிறாயா?” 'வேலை செய்யும் மாடு இது து" என்பர். அடிவிலை என்பது கறியின் விலையைக் கணக்கிட்டு ஊன் உணவுப் பொரு ளுக்காகக் கொண்டு செல்லப்படும் மாடாகும். அடிவிலை என்பது மாடடித்துக் கொன்று கூறு போட்டு விலைக்கு விற்பார், வாங்கும் விலையாகும். அத்தகு மாடுகள் அடிமாடுகள் எனப்படும். அடித்தல் கொல்லுதல்.

-