உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

_

இளங்குமரனார் தமிழ்வளம் 1

அரைவேக்காடு – பதனற்ற அல்லது பக்குவமற்ற நிலைமை.

வேக வைத்தல் பக்குவப் படுத்துதலாம். ‘சமையல்' என்ப தும், ‘சமயம்’ என்பதும் பக்குவப்படுத்துதல் பொருளவே. வேக் காடு முழுமையாக இருத்தல், வேண்டும் பக்குவமாகக் கருதப் படும். அரைவேக்காடு என்பது வெந்ததும் அன்று ; வேகாததும் அன்று, ஆதலால் இரண்டுங் கெட்ட நிலையதாம். இப்பொழுது அரசியல், சமயம் முதலியவற்றிலும் கல்வியிலும் கூட அரை வேக்காடு, என்னும் வழக்கு பெருகிக் கொண்டு வருகின்றது. “அது ஓர் அரை வேக்காடு; பேசிப் பயனில்லை ; விடு” என்பது அரை வேக்காட்டு மதிப்பீட்டுரை.

அலைபாய்தல் - தொடர் தொடராக நினைவு வருதல்.

அலை வரிசை வரிசையாக வருவதுபோலப் பலப்பல எண்ணங்கள் தொடர்தல் அலைபாய்தலாம். அலைபாயும் எண் ணங்கள் ஒன்றோடு ஒன்று மோதிமுட்டி அலைக்கழிவு செய்யும்.

சய்

வெண்ணங்கள் இன்பமூட்டுவனவும் நலம் செய் வனவுமாம் எண்ணங்கள் அல்ல என்பதும் துன்பமூட்டுவனவும் தீமை செய்வனவுமாம் எண்ணங்கள் என்பதும் அறியத்தக்கன வாம். “எனக்குள் அலைபாய்கின்றது; என்ன செய்வதென்றே தெரியாமல் தவிக்கிறேன்” என்பவர் உரையில் அலைபாய்தல் பொருளும் விளைவும் புலனாம்.

அவர் - கணவர்

அவர், பன்மைப் பெயரும், ஒருமைச் சிறப்புப் பெயருமாம். ஆயின் அவர் என்பது பொதுமையில் நீங்கிக் கணவரைச் சுட்டும் சுட்டாக அமைந்து பெருக வழங்குகின்றது. “அவர் இல்லை ; அவரைக் கூப்பிடுங்கள்; அவர் இருந்தால் இந்தப்பாடு உண்டா?” என்பவற்றில் எல்லாம் உள்ள ‘அவர், 'ஒரு மனைவியின் அல்லது பெண்ணின் வாயில் இருந்து வரும்போதெல்லாம், கணவரைக் குறித்தல் அறிக.

அவிழ்சாரி - மானமிலி

அவிழ்

-

وو

66

அவிழ்த்தல் ; இவண் உடையை அவிழ்த்தல் ; சாரி- திரிதல், உடையை அவிழ்த்தல். “அவிழ்த்துப் போட்டுத் திரியவா செய்கிறேன்' அவிழ்த்துப் போட்டு ஆடவா செய் கிறேன்" என்னும் வழக்குகளில் உண்மை அறிக. திரிதலும், ஆடலும் இந்நாள் நச்சு நாகரிகத்தின் இச்சை விளையாடல் களாகத் திகழ்கின்றன. சாரி என்பது திரிதல் பொருளது.