உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

13

'எறும்புச் சாரி’ புதுமுறை ; ‘குதிரைச்சாரி' பழமுறை ; 'சாரி போதல்' ஒழுங்குறப்போதல், அவிழ்சாரியோ ஒழுங்கறப் போதல் அவிழ்சாரி (அவுசாரி) பேச்சை என்னி எடுக்காதீர்கள்” என்பது வழக்குரை.

அவிழ்த்து விடுதல் - இல்லாததும் பொல்லாததும் கூறுதல்.

ம்

கட்டில் இருந்து விலக்கி விடுதல் அவிழ்த்து விடுதல் எனப் படும். ஆடு மாடுகளை மேய்ச்சல் புலத்திற்கு அவிழ்த்து விடுதல் நடைமுறை. கன்றுகளை அவிழ்த்து விட்டுத் தாயிடம் பாலூட்டு தலும் கறத்தலும் எங்கும் காணுவது. தாய் குழந்தைக்குப் பாலூட்டல் ‘அவிழ்த்து விடுதல்' எனவும் சொல்லப்படும். கச்சு, மாரார்ப்பு என்னும் மார்க்கட்டு என்பவற்றை அவிழ்த்து விட்டு பாலூட்டலால் அதனையும் அவிழ்த்து விடுதல் என்று குறிப்பது உண்டு. ஆனால் ஒருவரைப் பற்றி இல்லாததும் பொல்லா மாம் செய்திகளை இட்டுக்கட்டி "உண்மைபோல் திரித்துக் கூறுதலை அவிழ்த்து விடுதல் என்பதும் உண்டு. “என்ன அவிழ்த்து விடுகிறாய்; எனக்குத் தெரியாதா?” எனின் நீ பொய் கூறுகிறாய் என்பது பொருளாம்.

அழுதல் - கொடுத்தல்

அழுதல் என்பது அழுகைப் பொருள் தாராது, அவனுக்கு வன்படியாக அழுதேன் “என்னும் வழக்கில், அழுது அழுது கொடுப்பது. விரும்பியதாக இருப்பது இருபாலும் இன்பம். அதுவே ‘ஈத்துவக்கும்' இன்பம்' எனப்படும். பெறுபவர் தரு பவரை வாட்டி வருத்திப் பெறுவது, கொடுப்பதாக இல்லாமல் அழுவதாக அமைந்து விடுகின்றது. அழுவதிலும் (கொடுப்ப திலும்) பயனுக்கு அழுவதினும், பாழுக்கு அழுவதே மிகுதி என்பது வெளிப்படை.

அழுது அடம்பிடித்தல் - நிறைவேற்றல்.

குழந்தைகள் தங்களுக்கு உரிமையுடையவர்களிடம் தாங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள அழுது அடம் பிடிப்பது வழக்கம். இது வலிமை அல்லது வல்லாண்மையால் பெறுதற்குரிய வழியாகக் கொள்வதாம். அடம் பிடிப்பது என்பது தொடர்ந்து செய்வது ; அடை மழை என்பது போல.

அடம்பிடிக்கும் பயன், நிறைவேற்றல். ஆதலால் அப் பொருள் தந்தது.