உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இளங்குமரனார் தமிழ்வளம்

அறுத்துக் கட்டல் - தீர்த்துக் கட்டுதல்.

1

நெற்பயிர் கதிர் வாங்கி மணிதிரண்ட பின்னர் அறுத்துக் கட்டாகக் கட்டிக் களத்திற்குக் கொண்டுபோய்க் கதிரடித்தல் வழக்கம். அறுத்துக் கட்டலாம் இவ்வேளாண்மைத் தொழிற் சொல், வேறொரு வகையில் குறிப்பு மொழியாக வாழ்வில் பயன் படுத்தப்படுகின்றது.

னி

வாழ்க்கைத் துைைணயாக இருந்தவர்களுக்குள் கருத்து வேறுபாடு முற்றி இனி இணைந்து வாழ முடியாது என்னும் நிலைமை உண்டாகியபோது அவர்கள் மணவிலக்குப் பெறு தலும், விரும்பும் வேறொருவரை மணந்து வாழ்தலும் உண்டு. அதனை அறுத்துக் கட்டல் என்பர். அறுத்தல் மணவிலக்கு, கட்டல் மீள்மணம். தாலிகட்டுதல், தாலியறுத்தல் என்பவை அறிக.

அறுவடை - வருவாய்

அறுவடை வேளாண் தொழிலில் டம் பெறும் சொல். அறுவடை நாள் உழவர்களுக்கும், உழவுத் தொழிலில் ஈடுபட்டார்க்கும் இனிய நாள்கள். கடுமையான உழைப்பு நாள் அஃதெனினும். அவ்வறுவடைக்காலமே எதிர் நோக்கியிருக்கும் இன்பநாளாம். அவ்வறுவடைக்கால வருவாயைக் கொண்டது தானே அவர்கள் வாழ்வு.

வணிகர்கள் அலுவலர்கள் முதலிய பிறர்க்கும் பெரு வருவாய் ஏற்படும் வாய்ப்பு உண்டானால் ‘நல்ல அறுவடை, என்னும் வழக்கு உண்டாயிற்று. இங்கே அறுத்து மணி குவிக்கும் செயல் இல்லையாயினும், வருவாய் கருதி இவ்வாட்சி ஏற் பட்டதாம். மேலும் நேர்வழியல்லா வழியில் வரும் வருவாய்க் கும் ‘அறுவடை' என்பது இந்நாள் வழக்கிலுள்ளதாம்.

அறுவை - காதுவெறுக்க உரைத்தல்

அறுத்தல் வேலை அறுவை எனப்படும். மர அறுவை அறிந்தது. நெடும்பாவில், வேண்டும் அளவு அறுத்தெடுக்கும் துணி அறுவை எனப்படும். இவற்றின் மாறானது இவ்வறுவை. கத்தி, அரம்பம் இல்லாமல் நாவால் அறுக்கும் சொல்லே அறுவை எனப்படுகிறதாம். 'அறுவை' என்பது இப்பொழுது படித்தவர்களிடையே பெருவழக்காகவுள்ளது. தங்களுக்குப் புரியாததும், நுண்ணிய செய்தியும் கூட அறுவையாகச் சொல்லப்படுவதாயின. கேலி கிண்டல் வேடிக்கை ஆகியவை அறுவையாகி விட்டன. அறுவை, பொழுதை வீணாக்குவது