உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ்வளம்

_

1

ஆட்டிவைத்தல் - துயருறுத்தல், சொன்னபடி செய்வித்தல்

ஆட்டுதல் இன்புறுத்தலுமாம்; துன்புறுத்தலுமாம். குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டுதலும், ஊஞ்ச லாட்டுதலும் இன்பமாம். ஒருவரைத் தலை கீழாகக் கட்டிப் போட்டு ஆட்டினால் அத்துன்பத்தைச் சொல்வானேன்? இன்ப துன்பங்களுக்குப் பொதுவான ஆட்டுதல் சொன்னபடியெல் லாம் செய்ய வைத்தல் பொருளில் வருவது வழக்கு, “அவள் ஆட்டி வைக்க அவன் ஆடுகிறான்! அவனாகவா இந்த ஆட்டம் போடுகிறான் என்பர். இதில் ஆட்டுதற்கு ஆடுதல் விளங்கும்” வனைப் பிடித்த நோய்முகன் (சனி) ஆட்டுகிறது அவன் என்ன செய்வான்” என்பதில் கோளாட்டம் குறிக்கப்படுகிறது. ஆடு தலுக்கு நடுக்கம், அச்சம் முதலிய பொருள்கள் உண்மையால் அவ்வழி வந்தது ஆட்டி வைத்தலாம்.

ஆட்டுதல் - அலைக்கழித்தல்.

மாவு ஆட்டுதல், எண்ணெய் ஆட்டுதல்; கரும்பு ஆட்டுதல் என்பவை வழக்கில் உள்ளவை. இனித் தொட்டில் ஆட்டுதல், காலாட்டுதல் என்பவை வேறான ஆட்டுதல் வழிப்பட்டவை. மாவு ஆட்டுதல் போன்ற ஆட்டுதல் வழியில் வருவதே அலைக் கழித்தல் பொருள் தரும் ஆட்டுதலாம்.

ஆட்டப்படும் பொருளின் தோற்றம் முழுவதாக மாற, அரைத்தோ கசக்கிப் பிழிந்தோ உருச்சிதைப்பதே ஆட்டுதல் எனப்படும். அவ்வாறு நிலைமாறச் செய்வது முதல் வகை ஆட்டுதல்.

சான்ன சொன்னவாறெல்லாம் செய்ய வைப்பதும் ஆட்டுதலே. அது பின்னுள்ள வகையைச் சேர்ந்தது. ஆட்டி வைத்தல் என்பதும் அது.

ஆட்டுமந்தை - சிந்திக்காத கூட்டம்

66

ஆட்டுமந்தையாக இருக்கிறார்களே மக்கள்; சிந்திக்கிறார் களா?” என்று மேடையில் பலரும் சொல்வது வழக்கமாக உள்ளது. ஆட்டு மந்தை வயலில் கிடக்கும். ஒன்று எழும்பி நடந்து விட்டால் எங்கே போகிறது ஏன் போகிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளாமலே ஒன்றை ஒன்று தொடர்ந்து மந்தை முழுவதும் போய்விடும். இவ்வாறே ஒருவர் சொல்வதைக் கேட்டு அதைச் சிந்திக்காமலேயே ‘ஆமாம்' எனத் தலையாட்டும் கூட்டம் ஆட்டு மந்தையாகச் சொல்லப்படுவது வழக்கமாயிற்றாம்.