உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இளங்குமரனார் தமிழ்வளம்

1

மட்டு” என்பது வழக்கு. “அம்மி பறக்கும் ஆடிக் காற்றில் எச்சில் இலை எம்மட்டு?" என்பது போன்ற வழக்குத் தொடர் ஈதாம். இக்கன்னாப்போடல் - தடைப்படுத்தல், நிறுத்திவிடல்

ஒருவரிடம் ஓருதவியைப் பெறுதற்கு முயன்று, அது வெற்றி தரும் அளவில் ஒருவரால் தடுக்கப்பட்டு நின்று விடுவ துண்டு. அந்நிலையில் உதவிபெறாது ஒழிந்தவர் “அவர் இக் கன்னாப் போட்டு விட்டார். அவர் இக்கன்னாப் போட வில்லை யானால் எப்பொழுதோ நடந்திருக்கும்” என்பார்.

க்

இக்கன்னா என்பது தடுத்தல் பொருளில் வருவது, முற்றுப் புள்ளி வைத்தல் என்பது நிறுத்துதலைக் குறிப்பதுபோல் கன்னாவும் நிறுத்துதலேயாம், இக்கன்னா என்பது மெய் யெழுத்து. அதிலும் வல்லினப் புள்ளியில் முதல் எழுத்து. அதனால் அவ்வெழுத்தைச் சுட்டி நிறுத்தப்பட்டதைக் குறிக்கும் வழக்கம் உண்டாயிற்றாம். 'க்' முதலிய வல்லினம் சொல்லின் இறுதியில் வராது ; வரக் கூடாது என்பது அறிக.

இச்சிடல் - முத்தம் தருதல்

ச்’ என்பது ஓர் ஒலிக் குறிப்பு. மெல்லிய உதடுகள் ஒட்டி ஒலியெழுப்புவதால் உண்டாவது, 'ஓர் இச்சுக் கொடு காடு' என்று குழந்தைகளைத் தாய்மார் கேட்பது உண்டு. இப்பொழுது ‘ ச் ஒலி இல்லாமல் கதை வருவதில்லை. திரைப்படம் வருவதில்லை. ச்' : காதல் பொருளாயிற்று. இச்சை, இச்சித்தல் என்பவை விருப்பம் என்னும் பொதுப் பொருளில் இருந்து காதல் சிறப்புப் பொருளுக்கும் இடமாகி இறுக்கமாகப் பற்றிக் கொண்டது. இடித்துரைத்தல் -கண்டித்துரைத்தல்

இடிக்காமல் இடிப்பது இடித்துரை. சொல்லிடியே இவ் விடி. ஒரு குறை கண்டால் அன்பு, நட்பு, பதவி, செல்வம். செல்வாக்கு இவற்றைக் கருதிச் சிலர் அமைதியாக இருப்பர். சிலர் ‘ஆமாம்' போடுவர் ; சிலர் தூண்டியும் விடுவர். இவற்றால் ஒன்றன்மேல் ஒன்றாகக் கேடே உண்டாம். ஆனால், அறிவறிந்த சான்றோர் இடித்துரைக்க வேண்டியதை வேண்டிய பொழுதில் வேண்டிய அளவில் செய்யத்தவறார். இடிப்பார் இல்லையா? கெடுப்பார் வேறொருவர் வேண்டுவதில்லை என்பார் திரு வள்ளுவர், குத்திக்காட்டல் காண்க. நண்பனுக்கு இடிக்கும் கேளிர் என்பது ஒரு பெயர்.