உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

29

வார் எனத் தோற்றவர் இயலாமையும், ஊதியவர் வலிமையும் புலப்பட 'ஊதிவிடல்' ஆட்சியில் உள்ளதாம்.

ஊதுதல் - பருத்தல்

'முன்னைக்கு இப்பொழுது ஊதிவிட்டார்’ என்பதும் 'ஆளைக் கண்டு மயங்காதே ஊ ஊது காமாலை என்பதும் வழக்கும் பழமொழியுமாம். ஊதுதல் காற்றடைத்தல் காற்றடை க் கப்பட்ட தேய்வை (இரப்பர்)ப் பை ஊதுவது போல போல ஊதி விட்டார் என்பது பொருளாம். துருத்தி ஊதுதல் என்னும் தொழிலை அறிக ஊதை என்பது காற்று அதனை வளி என்பதும் உண்டு. அதுவே 'வாதம்' எனப்படும். வளி முதலா எண்ணிய மூன்று என்பார் வள்ளுவர். ஊதுதல் என்பது ஊதும் தொழிலைக் குறியாமல் ஊதிப் பருத்தலாம் நிலையைக் குறித்தலால் வழக்குச் சொல்லாயிற்று.

ஊம் போடல் - ஒப்பிக்கேட்டல்

ஒருவர் ஒரு செய்தியை அல்லது கதையைச் சொல்லும் போது அதனைக் கேட்டுக் கொண்டு வருவதற்கு அடையாள மாக வாயால் 'ஊம்' கொட்டல் வழக்கம். படுத்துக் கொண்டு பேசும்போது ‘ஊம்' கொட்டவில்லை என்றால் உறங்கி விட்ட தாகப் பொருள். விருப்பமில்லாத செய்தியைத் தவிர்ப்பதற்காகச் சொல்பவர் உறங்குவதாக எண்ணிக் கொள்ளுமாறு கேட்பவர் ஊம் போடாமல் விட்டு விடுவதும் உண்டு. ஊம் என்பது நும் என்றும் ஒலிக்கும், ஓர் ‘ஊம்' ஒப்புக் கொள்ளல் அடையாளம்' ஈர் ஊம் போடல் மறுப்பின் குறிப்பு ஊம் என்பது காரம். சாரியையோடு ஊங்காரம் எனப்படும்.

ஊமைக் குறும்பு - வெளியே தெரியாமல் குறும்பு செய்தல்

சிலர் தோற்றத்தால் மிக ஊமையாக இருப்பர். ஆனால் ஓயாது பேசித்திரிவர். செய்யாத குறும்புகளையும் செய்து டுவர். அத்தகையவரையே ‘ஊமைக் குறும்பு’ என்பர். ‘குறும்பு குசும்பு’ என வழக்கில் க்கில் உள்ளது. ள்ளது. இங்கு ஊமை என்பது ஊமைத் தன்மையைக் குறியாமல், மிகுதியாக வெளிப்படப் பேசாமல் என்னும் பொருள் தருவதாம். ஊமைக் குறும்பன் ஊரைக் கெடுப்பான் என்பது பழமொழி.

எடுத்தாட்டல் - பிறருக்குரியதை முன்னின்று செய்தல்

நம்மால் என்ன செய்ய முடியும் எனச்சில செயல்களைச் சிலர் கைவிட்டுவிடுவர். அவர்க்கு வேண்டியவர் அல்லது