உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

ஓட்டமில்லாமை

L

இளங்குமரனார் தமிழ்வளம்

வறுமை

1

ஓட்டம் என்பது இயக்கம், அதிலும் விரைந்த இயக்கம், L பணவாய்ப்பு இருந்தால் பலவகை ஓட்டங்களும் ஒருவர்க்குச் சிறப்பாக இருக்கும். பண ஓட்டமே மற்றை மற்றை ஓட்டங் களுக்கு அடிப்படை. பணமிருந்தால் சமையல் சாப்பாடு கொண் டாட்டமாக இருக்கும். நடையுடை சிறப்பாக இருக்கும். போக்கு வரவும் நிகழும். தொழில் தட்டின்றி விளங்கும். பணவோட்ட மில்லாவிட்டால் எல்லாமும் படுத்துவிடும். ஆதலால் ஓட்டமில்லை என்பது கையில் ‘காசு' போக்குவரத்து இல்லை என்பதைக் குறிக்கும். ‘பணம்’ பத்தும் செய்யும் என்பது பழமொழி. பொருளானாம் எல்லாம் என்பது திருக்குறள். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்னும்போது ஓட்டமென்ன இருக்க முடியும்? ஓட்டைக்கை - சிக்கனமில்லாத கை

ஓட்டைப் பானையோ சட்டியோ, உள்ள பொருளை ஒழுக விட்டுவிடும். ஓட்டைப் பா ப் பானையைப், பாடம் கேட்ட அளவில் மறந்துவிடும் மாணவனுக்கு ஒப்பாகக் கூறுவர் இலக்கணர். நீரோடுவதற்கு வழியாக இருப்பது ஓடு. அதில் ஓட்டை விழுந் தால் ஒழுக விட்டு விடுமல்லவா!

-

சிலர் கையைக் காட்டு என்பர்.கூட்டுக்கை வைத்துக் காட்டு என்பர். கை விரல்களைக் கூட்டி நீட்டினால் விரலுக்கு விரல் ஓட்டை இடைவெளி வெளி - இருந்தால், உனக்கு ஓட்டைக் கை காசு தங்காது என்று சொல்லி விடுவர். இது குழந்தைகள் விளை யாட்டிலும் உண்டு. செலவாளிகள் என்பதற்கு அல்லது சிக்கன மில்லாதவர் என்பதற்கு ‘ஓட்டைக்கை' என்பது வழக்கு. ஓடவில்லை - தெளிவாகவில்லை; செயல்பட முடியவில்லை

திடுமென்று நிகழாத ஒன்று நிகழ்ந்து விடும். அதிர்ச்சிக்கு உரியதோ எதிர்பார்ப்பு இல்லாததோ நிகழ்ந்து விடலாம். அந் நிலைக்கு ஆட்பட்டவர் எனக்கு ஒன்றும் ‘ஓடவில்லை' என்பர். என்ன செய்வதென்று தெரியவில்லை என்பதே ஓடவில்லை என்பதன் பொருளாம். இங்கு ஓடுதல் என்பது எண்ணத் தின் ஓட்டத்தையே குறித்தது. செயலற்றுப்போன நிலையையே ஓடவில்லை என்பது குறிக்கின்றதாம்.

சிக்கலான வினாவை எழுப்பி விடை கேட்கும்போதும் “எனக்கு ஒன்றும் ஓடவில்லை; நீங்களே மறுமொழி சொல்லுங்கள்’ என்பதும் வழக்கில் கேட்பதே.