உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

55

எதிர்பார்த்தும், தங்களுக்கு உதவுதல் அவர்கட்குக் கட்டாயக் கட மை போலவும் வலியுறுத்திப் பெறுவர். இத்தகையவர்கள் உறவினைக் காலைச் சுற்றியது என்பது வழக்காயிற்று. சுற்றம் என்னும் சொல்லும் எண்ணத் தக்கதாம்.

காலைப் பிடித்தல் - பணிந்து வேண்டுதல்

இறைவன் திருவடியை வணங்கல் பழஞ்செய்தி. அவ்வாறே தோற்றுப் போன வீரர்கள் தங்கள் கருவிகளை வெற்றி பெற்றவர் காலடியில் வைத்து அடைக்கலம் அடைதலும் மரபு. இவற்றைப் போல் குற்றம் செய்தவர்கள் தம் குற்றத்தைப் பொறுக்க வேண்டு மென்று ஊர் மன்றத்தில் விழுந்து வணங்கலும் வழக்கு. இவற்றி லிருந்து காலைப் பிடிக்கும் வழக்கம் உண்டாயிற்று. பணிவோடு ஒன்றை வேண்டுவோர் வேண்டுதற்கு உதவுவார், காலைப் பிடித் தலும் வணங்கலும் நடைமுறையாயிற்று. காரியம் ஆகக் காலைப் பிடித்தல் எனப் பழமொழியும் உண்டாயிற்று.

காலை வாரல் - கொடுத்தல், நம்பிக்கை இழப்பு

66

காலைப் பிடித்தலுக்கு எதிரிடையானது காலைவாரல். காலை வாருதல் என்பது வீழ்த்துதல் பொருளது. அவனை நம்பிக் கொண்டிருந்தேன். அவன் என் காலை வாரிவிட்டான்' என்பதில் நம்பிக்கைக் கேடும், கெடுதலும் விளக்கும். சண்டை யில் காலை வாரி விடுதலும் வீழ்ந்தவன் மேல் ஏறிக் கொள்ளலும் என நிகழ்ந்த நடைமுறை உறுதி சொல்லி அவ்வுறுதியைக் காப் பாற்றாமல் ஒதுங்குதலைக் காலை வாருதலாகச் சொல்ல வாய்த்ததாம்.

காவணம் - திருமணக்கொட்டகை

திருமணம் திருவிழாக்கள் நிகழுகின்றன என்றால் அதற்கு முன்னறிவிப்பு பந்தலாக விளங்குகின்றது. “விரித்த பந்தர் பிரித் ததாமென' எனக் கம்பரால் குறிக்கப்படுகிறது பந்தல். எனினும், பந்தல், துன்ப நிகழ்வுக்கு உரிதெனக் கருதப்படுவதும் உண்டு. இறப்புக்குப் போடுவது பந்தர் எனவும் சிறப்புக்குப் போடுவது காவணம் எனவும் செட்டி நாட்டு வழக்காக உள்ளது. காவாவது பூங்கா; வணம் ஆவது வண்ணம். வாழை முதலிய மரங்களும் பூக்களும் பொதுளியது காவணம் என்க. பந்தர் பார்க்க. காளி - சீற்ற மிக்கவள்

சீற்றம் மிக்குப்பேசுபவள், தலைவிரி கோலமாகத் திரிபவள், மெல்ல நடவாமல் ஆட்டமும் ஓட்டமுமாக நடப்பவள், பேய்க்