உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

67

இருந்து கைகொடுத்தல் என்பது, உதவுதல் பொருள் தருவ தாயிற்று.

“நீங்கள் கொஞ்சம் கைகொடுத்தால் மேடேறிவிடுவேன்” என்பதில் கைகொடுத்தல் என்பதன் உதவிப் பொருளும், "மேடேறி விடுவேன்” என்பதன் உதவிப்பேற்றின் விளைவும் வெளிப்படும்” கழகம் கைகொடுத்தால் நூலெழுதுதற்கே பொழுதெலாம் செலவிடுவேன்” என்று பாவாணர் குறிப்பிடுகிறார். கை தூக்கல் - உதவுதல், ஒப்புகை தருதல்

கைகொடுத்தல் போல்வதே கைதூக்கலுமாம், கைதூக்கி விடுதல் என்பது பள்ளத்துள் இருப்பாரை மேட்டில் சேர்த்தல். அது போல், கடன்துயர், வறுமை முதலியவற்றுக்கு ஆட்பட்டு இடர்ப்படுவார்க்கு உதவுவதால் அவர்கள் அவ்விடர் நீங்குவர். அந்நிலையில் “நீங்கள் கைதூக்கி விட்டதால் தான் கவலை யில்லாமல் வாழ்கிறேன்” என நன்றி பாராட்டுதல் உண்டு.

இனி, கைதூக்கல் என்பது ஒப்புகை தருதலையும் குறிக்கும். கைதூக்கச் சொல்லி வாக்கெடுப்பு நடத்துவதும் நடைமுறையே. என் கருத்தைச் சரி என்று ஏற்பவர்கள் கைதூக்குங்கள் என்பதில் ஒப்புகைப் பொருள் உள்ளமை தெளிவாம்.

கைதூக்கி – சொன்னபடி கேட்டல்

கைதூக்கல் என்பது ஒப்புகைப் பொருளும் தருவது. ஆனால் அது, உண்மையென்று தோன்றுமானால்தான் கைதூக்கல் நிகழும். இல்லையானால், கைதூக்காமல் கருத்துக்கு ஒப்பளிக் காமல் இருத்தலுண்டு. இக் ‘கைதூக்கி’ அத்தகைத்தன்று. சரி யானது, தவறானது என்று பார்த்துக் கைதூக்காமல், என்ன சொன்னாலும் சொன்னவர் கருத்தை ஏற்பதாகத் தூக்குவதாம். 'தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை' என்பது இலக்கியக்காட்சி. அதற்கு உலகியல் காட்சி கைதூக்கியாம். முன்னால் இருப்பவன் கையைத் தூக்கிக்காட்டினால் கண்ணாடி அப்படியே காட்டு மன்றோ. அதற்கு மாறாகக் காட்டாதே. அத்தகையனே கைதூக்கி என்க.

கைத்தூய்மை - களவு திருட்டுச் செய்யாமை

கைசுத்தம்' என்பர். கைசுத்தம் நீரால் கழுவுவதால் ஏற் படும். இது, களவு, திருட்டு எனக்கொள்ளாமையால் ஏற்படுவது. கையும் வாயும் சுத்தமாக இருந்தால் எங்கும் எப்படியும்