உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

81

சிணுங்கும்போது சில சில துளி கண்ணீர் வருவதுண்டா கலின் அம்மாதிரி துளிர்க்கும் மழையைச் சிணுங்குதல் என்பதும் வழக்கமாயிற்று.

சில்வாரி - சின்னத் தனமானவன்

‘சில்' என்பது சிறுமைப் பொருளது, 'வாரி' என்பது ‘மானவாரி' என்பதில் உள்ளது போன்றது. இச்சொல் வான வாரி என்பது. வான்மழையை நம்பிய நிலம் ‘வான வாரி'யாம். வாரியாவது வருவாய். புன்செய் நிலத்திலும் கிணறு இல்லாக் கால் வானவாரி என்றும் வானம் பார்த்தது என்றும் கூறப்படும். காலங்

சின்னத்தனமான வழிகளில் வழிகளில் பொருள்தேடிக் கழிப்பவன் சில்வாரி, சில்லவாரி எனப்படுவான். இதனைச் சல்ல வாரி என்பதும் வழக்கு. சல்ல என்பது சள்ளை என்பதன் திரிபாம். பிறர்க்குச் சள்ளை - ஓயாத் தொல்லை - தந்து பொருள் தேடுவது சள்ளைவாரித் தன்மையாம். “அவன் சில்வாரி, எப்பொழுதும் காலைவாரிவிடுவான்” என்பது எச்சரிக்கை வழக்கம்.

சிலுக்கட்டி

சிறியது

-

கனமுமில்லாதவர்

-

மிகக் குள்ளமானவர் சிலுக்கட்டி எனப்படுவார். சில்லுக் கருப்புக் கட்டி, கருப்புக் கட்டி வகையுள் ஒன்று. அது சின்னஞ்சிறிய அச்சில் ஆக்கப்படுவது. அச்சுக் கட்டி அதனிற் பெரியது. வட்டு அதனினும் பெரியது தேங்காயை உடைத்துக் கீற்றுப் போட்டது. ‘சில்லு' எனப்படும். சிறு குருவி சில்லை' எனப்படும். இவையெல்லாம் சிறியது (சின்னது) என்னும் பொருள். 'என் சில்லைக்குடில்' என்பது சிலப்பதிகாரம். சில், சிலு சில்லை என்பவையெல்லாம் ஒருவழிய. “சிலுக்கட்டி வண்டி” “சிலுக்கட்டியாள்” “சிலுக்கட்டிப் பிள்ளை' என்பவை வழக்குகள். மிகச்சிறிய உந்தினைச் “சிலுக்கட்டிக்கார்” என்பதும் கேட்கக் கூடியதே.

சிலுப்புதல் - மறுத்தல், மறுத்து ஒதுங்குதல்

66

மாடு சினம் சீற்றம் உடை உடையது எனின் கொம்பை வளைத்துக் குத்துவதற்கு வரும். அவ்வாறு வருவதைச் சிலுப்புதல் என்பர். என்ன சிலுப்புகிறாய்; பூசை வேண்டுமா?” என்று அடிப்பர், ஆயினும் சிலுப்புதலை அத்தகைய மாடுகள் விடா, கொம்பை ஆட்டி அசைத்துத் திருப்புதலே சிலுப்புதலாம். மோர் கடைதலை மோர் சிலுப்புதல் என்னும் வழக்கமும் உண்டு. இவ்வழக்கங்களில் இருந்து ஒருவர் ஒன்றைக் கூறும்போது அதனை ஏற்றுச் செய்யா