உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குச் சொல் அகராதி

87

விளக்கும். உள்ளத்தின் சூடு, சொல்லின் சூடாகக் குறிக்கப்படு கிறதாம். தண்ணிய நாட்டில் சூடாகப் பேசுதல் இனிமைப் பொருளாம். வெப்ப நாட்டில் சூடாகப் பேசுதல் தீமைப் பொருளாம். இவற்றைக் கருதுக.

சூடுபடுதல் - அஞ்சுதல்

சூடுகண்ட பூனை பாலைப் பார்த்ததும் ஓடுதல் விகட ராமன் கதை, “பன்றி வேட்டையில் வெகுண்டு வந்த நாய் சோற்றுப் பானையைக் கண்டு ஓட்டம் பிடித்தது” என்பது பழமொழி. நாயால் கடியுண்டவன் நாயைக் கண்டாலே கடி யுண்ட உணர்வினனாதல் உளவியல். இவற்றைப் போல்வதே சூடுபடுதலாம்.

விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் கையை எடுப்பதைப்போல் என உவமை காட்டினார் பாவேந்தர். சூடு பட்ட பட்டறிவு இருந்தால் சுடு பொருளைக் கண்ட அளவானே அஞ்சுதல் கண்கூடு. இவ்வகையால் சூடுபடுதல் என்பற்கு அச்சப் பொருள் உண்டாயிற்றாம்.

சூடுபிடித்தல் - கிளர்ச்சியுண்டாதல்

பச்சை விறகில் பற்றிய தீ உடனே சூடுபிடித்து எரிவது ல்லை. பற்றிப் பற்றி எரிந்து சூடுபிடித்துவிட்டால் பின்னர் அனல் கக்கி எரியும். அவ்வாறு சிலர் உள்ளமும் அமைதியாகவும் அடக்கமாகவும் இருக்கும். ஆனால் அவ்வமைதியும் அடக்கமும் வேளைவரும்போது இருந்த இடமும் தெரியாமல் மறைந்து போம். கிளர்ச்சியுண்டாகிய அந்நிலையைச் சூடுபிடித்தல் என்பது வழக்கு. இப்பொழுதுதான் வேலை சூடுபிடித்திரு கிறது; விளையாட்டு சூடு பிடித்திருக்கிறது என்பது நடைமுறை. சுறுசுறுப்பு அல்லது கிளர்ச்சி உண்டாகிவிட்டது என்பது பொருளாம்.

செங்கல் சுமத்தல் - சீரழிதல்

செங்கல் சுமந்து சீரழிந்தேன் என்னும் மரபுத் தொடர் செங்கல் சுமத்தல் வழக்கையும் அதன் சீரழிவுப் பொருளையும் ஒருங்கே விளக்குவதாம். செங்கற்சுமை, கடுஞ்சுமை, ஏற்றல் இறக்கல் தூக்கல் சுமத்தல் எடுத்தல் கொடுத்தல் எல்லாம் கனத்தல். அலுப்பு உண்டாகும் தொழிலில் செங்கற் சுமை குறிப்பிடும் ஒன்றே. செங்கற்சுமையர். எவ்வளவு உண்டாலும் உடல் தேறார். கூலி எப்படி? சிற்றாள் “கூலி! சிற்றாள் வேலை எட்டாள் வேலை” என்னும் சிறப்பு போதுமே! சம்பளம் என்ன சம்பளம்!