உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

செடி - நாற்றம்

இளங்குமரனார் தமிழ்வளம் 1

செடி, இலை, வேர், பட்டை இவற்றுக்கு வெவ்வேறு மணம் உண்டு. பூக்களோ, மணம் பரப்புதல் பற்றிச் சொல்ல வேண்டுவதில்லை. நன்னாரி வேர், வெட்டிவேர் நறுமையான மரு, மருதோன்றி, பச்சை, துளசி இலைகள் மணமுள்ளவை வேம்பு, அதிமதுரம், கடுக்காய் முதலிய பட்டைகளும் மண முள்ளவை. ஆனால் சில செடிகள் மிகத் தொலைவுக்குக்கூட மூக்கை வருத்தும் நாற்றம் உடையவையாக உள்ள அவற்றால் 'செடி' என்பதற்கு, நாற்றப் பொருள் உண்டாயிற்று ‘செடி என்பது நூறு பவுனைக் குறிக்கும் வசைச் சொல்லும் ஆயிற்று. 'செடிப்பயல்' என்பர்.

சேகரம் - நட்பு

சேகரம், சேர்ந்திருத்தல் என்னும் பொருளது “இவனுக்கும் அவனுக்கும் சேகரம் “என்பர் 'என்பர் இதனால் நட்புப் பொருள் இதற் குண்மை விளங்கும்.

சேர்ந்த வீடுகள், சேர்ந்த நிலங்கள் ஆகியவை ஒரே சேகர மாக உள்ளன எனப்படும். சேர்ந்திருத்தல் என்னும் பொரு ளுடைய 'சேரகம்' என்னும் சொல்லின் எழுத்துகளாகிய ரகர கரகங்கள் இடமாறிச் சேகரம் ஆயின. எனினும் பொருள் மாற்றமின்றி வழங்குகின்றது. சிவிறி என்பது விசிறியாகவும், கொப்புளம் என்பது பொக்களமாகவும் வழங்குவதுபோல என்க. சேர்க்கை - நட்பு, தொடர்பு

டம்

ம்

சேர்ந்திருக்கும் தன்மை சேர்க்கை. சேர்க்காளி, சேத்தாளி என்பனவும் சேர்ந்திருத்தலே. இவையெல்லாம் நட்பைக் குறிப் பனவே. சேக்கை என்பது குச்சி பஞ்சு நார் முதலியவை சேர்த் தமைக்கப்பட்ட கூடாகும். கடற்கரையைச் சேர்ந்துள்ள சேர்ப்பு எனப்படும். அதற்குரிய தலைவன் ‘சேர்ப்பன்' எனப் பட்டான். சேரன், சேரல் சேரலன் என்பனவெல்லாம் கடற் கரையைச் சார்ந்த நாட்டினன் என்னும் குறிப்புடையதேயாகும். இச்சேர்த்தல் என்பது நட்பைக் குறித்து வருதல் வழக்காயிற்று. “உன் சேர்க்கைதான் உனக்குக் கேடு பார்த்துக் கொண்டிரு என்பது எச்சரிப்புரை.

சூடேற்றல் – வெதுவெதுப்பான சுவைநீர் பருகுதல்

(குளம்பி, தேநீர் முதலியன குடித்தல்)

وو

1. குளிராகக் குடித்தல், வெதுப்பாகக் குடித்தல் எனக் குடி வகைகள் இரண்டு. அவற்றுள் வெதுப்பாகக் குடிப்பன தேநீர்,