உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ்வளம் – 1

இல்லாத வாலை வெட்டுவதுதான் எப்படி? வாலாட்டுதல் நாய் வேலை. வால் நீட்டல் நரிவேலை. குரங்கும் வாலையாட்டும். இங்கே வால் நாய், நரி வால்களை நீக்கிக் குரங்கு வாலைக் குறித்ததாம். குரங்கின் இயல்பு குறும்பு. அதன் வாலாட்டம் என்பது குறும்பு செய்தலே. என்னிடம் குறும்பு செய்தால் அதனை அறுக்க எனக்குத் தெரியும் என்பதே வாலாட்டினால் ஒட்டத் தரிப்பேன் என்பதாம். “பெரிய வால்” என்று ஒருவரைச் சுட்டினால் அவர் செருக்கானவர் என்பது குறிப்பு. என்னிடம் வாலாட்டாதே என்றால் என் செயலில் தலையிடாதே என்பது பொருளாம். தலையும் வாலும் மாறிக் கிடக்கும் நிலை இது. வாழ்க்கைப்படல் - மணம் செய்தல், மனைவியாதல்

திருமணத்தை ‘வாழ்க்கை ஒப்பந்தம்' என்பது புது வழக்கு. ‘வாழ்க்கைத் துணை “என மனைவியைத் திருக்குறள் கூறும். அதன் வழிவந்த படைப்பு அது, “உனக்கு வாழ்க்கைப் படுகிறேன் என்று முதிய பெண்கள் சிறு குழந்தைகளிடம் விளையாட்டாகக் கேட்பதும் உண்டு. “உனக்கு வாழ்க்கைப் பட்டு வந்து என்ன கண்டேன்” என்று ஏக்கம் தெரிவிப்பாரும் உண்டு. வாழ்க்கைப் படுதல் என்பது மனைவியாதல் என்னும் பொருளதாம்.

கணவன் உனக்கு வாழ்க்கைப் படுகிறேன் என்னும் வழக்கு இல்லை. உன்னைக் கட்டிக் கொள்கிறேன் என்பதே வழக்கு. வாழ்க்கை என்பது பொதுமை நீங்கி மணவாழ்வைக் குறிப்பதால் வழக்குச் சொல்லாயிற்றாம்.

வாழாக்குடி - மணந்து தனித்தவள்

திருமணம் நிகழ்ந்திருக்கும். வாழ்க்கைக்குச் சென்றவள் கணவனுக்கும் அவளுக்கும் ஒவ்வாமையால் வாழ்வை இழந்து பெற்றோருடனோ, தனித்தோ குடித்தனம் செய்வாள். அவள் வாழாக்குடி எனப்படுவாள். கணவனை இழந்தவள் வாழாக் குடி யல்லள். அவள் கைம்பெண். அறுதாலி எனப்படுவாள். கணவ னால் விலக்கி வைக்கப்பட்டோ, தானே விலகியோ தனித்து வாழ்பவளே வாழாக்குடியாம். இங்கும் வாழ்க்கை பொதுமை நிலையில் நீங்கி இல்வாழ்க்கைப் பொருளுக்கு ஆவது வழக்காம். அவள் வாழாக் குடியாள்; அவளிடமா குழந்தையைத் தரு கிறாய்” என்பது வாழாக்குடிக்குப் பெண்களும் தரும் பரிசு.

66

விடியாமூஞ்சி - கிளர்ச்சியில்லா முகம்

விடியாமை, பொழுது புறப்படாமை. பொழுது புறப்படாப் பொழுதில் இருள் கப்பிக்கிடக்கும். அப்பொழுதில் முகமும்