232
ஒடம்படி (2)
இளங்குமரனார் தமிழ்வளம்
―
1
மாதந்தோறும் பெறும் படியை ஓடம்படி என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு. உடன்பட்டு ஏற்றுக் கொண்ட தொகை உடம்படி எனப்பட்டு, ஒடம்படி என உகர ஒகரத்திரிபாகி இருக்கும். ன்படிக்கை உடம்படிக்கை ஒடம்படிக்கை என்பவற்றை நினைக. உடன்பாடு என்பது 'உடம்பாடு' எனவருதல் வள்ளுவம்.
ஒடியன்
உ
-
-
ஒடியன் என்பது பனங்கிழங்கைக் குறிக்கும் சொல்லாக யாழ்ப்பாண வழக்கில் உள்ளது. கிழக்கை ஒடித்துத் துண் டாக்கிப் பயன்படுத்துவதால் ஒடியன் என்பதாம். ஒடுக்கம்
L
துறவர் அறிவர் உயிர் ஒடுக்கமாகிய இடம் ஒடுக்கம் எனப்படும். ஒடுங்கி என்பது இறைமைப் பெயராகச் சுட்டும் சிவ ஞான போதம். தமிழகத் தென்பகுதிகளில் ஒடுக்கங்கள் பல திருக்கோயில் திருச்சுற்று பூந்தோட்டம் முதலியவற்றுடன் ம்
காணலாம்.
ஒடுக் கெடுத்தல்
சுடக்கப் போடுதல் என்பதை ஒடுக்கெடுத்தல் என்பது வழக்கு. விரலை நீட்டி மடக்கிச் சடக்கென அல்லது சுடக் கென ஒலிவரச் செய்வது சுடக்கு - சொடக்கு - என்பது. அது ஒடுங்கிய அல்லது சுருங்கிய நரம்பு எலும்பு ஆயவற்றை இழுத்து நீட்டி விடுதல் ஒடுக்கு (சுடக்கு) எடுத்தல் எனப்படுகின்றது.
ஒண்டிக்கட்டை
ஒற்றையாள் தவிர எவரும் இல்லாத குடித்தனம் ஒண்டிக் கட்டை எனப்படுதல் நெல்லை முகவை வழக்கு. அதனை ‘ஒற்றைப் பேரன்' என்பதும் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி என்பது உத்திக்கு உத்தி என்பது போன்றதாம்.
ஒத்துமா
-
ஒன்றோடு ஒன்று ஒன்ற - ஒட்ட -ச் செய்வது ஒற்றடம் ஒற்று எனப்படும். இவை ஒத்தடம் (ஒத்தணம்) ஒத்து எனவும் வழங்கும். முகத்திற்குப் போடப்படும் மணப் பொடியை ஒத்துமா என்பது திருவில்லிப்புத்தூர் வட்டார வழக்கு. மணப்பொடியை ஒத்துபஞ்சில் ஒத்தி எடுத்து முகத்தில் ஒத்துதலால் ஒத்துமா எனப்படுகின்றதாம்.