உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

குரக்குவலி:

இளங்குமரனார் தமிழ்வளம்

1

என்பவர்

நரம்பு வெட்டி இழுப்பதைக் இழுப்பதைக் குரக்குவலி குரக்கை வலி என்பதும் அது. இனி கெண்டை வலி என்றும் கெண்டை புரட்டல் என்பதும் நரம்பு சுண்டி இழுப்பதாம்.

குரங்கு மட்டை:

மேல் மட்டையைத் தாங்கி நிற்கும் பனையின் அடி மட்டையைக் குரங்குமட்டை என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு. இருபக்கமும் பற்றிப் பிடித்த கைபோல் தோன்றிய தோற்றத்தின் வழியாக ஏற்பட்ட வட்டார வழக்குச் சொல் இது. எனினும் அகரமுதலிகளிலும் இவ்வாட்சி பொது வழக்காகி யுள்ளது.

குரால்:

ஈனாததும் ஈனும் பருவம் வந்ததும் ஆகிய ஆட்டைக்

குரால் என்பது இடை யர் வழக்கம். வெடிப்பாகவும்

எடுப்பாகவும் துள்ளித் திரிதல் குறித்த பெயர் இது. குர் > குரு குருத்து > குருவி இவற்றை எண்ணினால் இதன் அடிப் பொருள் விளக்கமாம். இது தென்னகப் பொதுவழக்கு.

குரு:

பெரிய அம்மையைக் ‘குரு' என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும். "வெப்பும் குருவும் தொடர” என்பது சிலப்பதிகாரத் தொடர். நீர் கோத்த பெரிய அம்மைக் கட்டி வெண்ணிறமாகத் தோற்றம் தருதலால் இப் பெயர் பெற்றது. குருவும் கெழுவும் நிறனாகும்மே என்பது தொல்காப்பியம். குருச்சி:

ரு, குருவன், குருத்துவம் என்னும் வழியில் இலக்கிய ஆட்சி பறும் சொல்லன்று குருச்சி. இது, தக்கலை

வட்டாரத்தில் விதை என்னும் பொருளில் வழங்குகின்றது.

ஒளி என்னும் பொருள் தருவது குரு. அது தொல் காப்பிய வழியது. விதையை முளைக்க வைத்தால் முளை ஒளியொடு வெளிப்படுதல் கண்கூடு. இதனைக் கொண்டு குருச்சி எனப் பெயரீடு செய்துள்ள வட்டார வழக்கு பொது மக்களும் புலமைப் பெருமக்களை ஒப்பவர் என்னும் எண்ணத்தை உண்டாக்கத் தவறாது. முளையைப் ‘பாவை' என்னும் பழந்தமிழ் ஆட்சியும் 'பாவை' என்பது 'பார்வை' வழி வந்தது என்பதும் கருதுக. பயிரின் குருத்தைக் காணின் அதன் ஒளிப்பொருள் வெளிப்படும்.