288
கோப்பு: (1)
-
―
இளங்குமரனார் தமிழ்வளம் 1
-
-
கோக்கப்பட்டது கோப்பு. பலவகைப் பொருள்களை L மணிகளை மலர்களை இதழ்களை ஓர் ஒழுங்குற வைப்பது கோப்பு எனப்படும். இந்நாள் அலுவலகக் கோப்புகளையும் அந்நாள் கோவைகளையும் எண்ணுக. இக்கோப்பு மக்கள் வழக்கில் உடை, அணி, ஒப்பனை முதலியவற்றைக் கொண்டு பொலிவாக இருப்பவரை ‘அவர் கோப்பானவர்' என்று பாராட்டாக உள்ளது. கோப்பு, விளக்கமாகக் கட்டுக்கோப்பு என்பதுமாம். கோப்பன் = பொலிவானவன். இது தென்னக
வழக்கு.
கோப்பு: (2)
கோப்பு உழவர் வழிச் சொல்லாகும். கல்வெட்டிலும் கோப்பு ஆட்சி உண்டு. ஏரிநீர், வயல்சென்று பாய்வதற்குப் பகுத்து விடுவதைக் கோப்பு என்பது வழக்கு. கட்டுக் கோப்பு என்பது, ஓர் ஒழுங்குபட்ட அமைப்பு ஆகும். அமைப்பு ஆகும். இப்பகுதியில் பாய்நிலம் இவ்வளவு எனக் கணக்கு வைத்து அதற்குத் தக்க அளவு, பொழுது ஆயவை வரம்பு செய்து நீர்விடுவது கோப்பு வ ஆகின்றது.
கோப்பு: (3)
செப்பமாகவும் பொருந்தவும் செய்யப்படும் செய் நேர்த்தி கோப்பு எனப்படும். அதனால் கோப்பு என்பது அழகு என்னும் பொருளமைந்த வழக்காகச் சோழவந்தான் வட்டாரத்தில் வழங்குகின்றது. கோத்தல், கோவை என்பவை ஒழுங்குறத் தொடுத்தல் அறிக.
கோம்பை:
மலையடி வாரத்தில் உள்ள ஊர்கள் பல கோம்பை என்னும் பெயருடன் வழங்குகின்றன. கோம்பை என்பது பள்ளத்தாக்கு என்னும் பொருளில் கண்டமனூர் வட்டார வழக்கில் உள்ளது. கூம்பு> கோம்பு> கோம்பை.
கூம்பு வடிவில் உயர்ந்த மலையின் அடிவாரம் கோம்பை என வழங்கியதாகலாம். ஆங்குள்ள ஊருக்கும் அப் பெயர் வழங்குதல் இயல்பு.