326
தாச்சி:
―
இளங்குமரனார் தமிழ்வளம் 1
-
தா(ய்)ச்சி என்பது தலைமை என்னும் பொருளில் திருப்பாச்சேத்தி வட்டார வழக்காக உள்ளது. தாயே குடும்ப இன - த் தலைமை, தாய்த் தெய்வத் தலைமை என்ப வற்றின் வழிவந்த ஆட்சி ஆகலாம். தாய்மொழி, தாய்நாடு, தாயம் ஆ என்பவற்றின் தலைமைத் தகுதியைக் கருதலாம்.
தாட்டி:
வ
தாட்டி, தாட்டிகம் என்பவை வலிமை என்பதன் பொருள் வழிப்பட்டு வழங்குதல் நெல்லை வழக்கு. தாட்டு ஓட்டு என்பது இணைமொழி. தாட்டு தடை. தட்டு > தாட்டு. தட்டோர் = தடுத்து நிறுத்தினோர். (புறம் ) தடுத்து நிறுத்துதல் வலியர்க்கே ஆகுமாதலால் வலிமைப் பொருள் கொண்டது. தடுத்தல், கிளித்தட்டு, தட்டுத்தடுமாறி என்பவை எண்ணுக. தாத்து:
தாழ்ந்து பள்ளமாக உள்ள இடத்தைத் தாத்து (தாழ்த்து) என்பது தென்னக வழக்காகும். தாழ்த்து = தாழ்வான இடம். தாதாரி:
>
தாய்வழியில் வந்த உரிமையாளர் ( பங்காளி ) தாதாரி எனப்படுதல் விருதுநகர் வட்டார வழக்காகும். தாய்தாரி > தாதாரி. பட்டம் தாங்கியவர் பட்டதாரி எனப்படுவது போன்றது. தாரம் = தன்னுடைமையானது.
தாம்படிப்பு:
களத்தில் மாடுகட்டிப் போரடித்தல் பிணையல் எனப்படும். பிணையல் = ஒன்றோடு ஒன்று பிணைத்து மாடுகளை மிதிக்க விடுதல். பிணைத்தற்கு உரிய கயிறு ‘ தாம்பு’ ஆகும். தாம்பால் பிணித்து மிதிப்பதால் (கதிரடித்தல் போல ) தாம்படிப்பு என்பது கம்பம் வட்டார வழக்காகும். தாம்பு + அணி (தாவணி) எனல் அறிக.
தாய மாட்டுதல்:
=
தாம்பணி,
தாய் தந்தை வழி உரிமை பாராட்டித் தடுத்து வைத்தல். “தாயமாட்டி விட்டார்கள்; இல்லாவிடில் நேற்றே வந்திருப்பேன் என்பது வழங்குமொழி. இது நெல்லை வழக்கு. தாயம் என்பது தாயவிளையாட்டு. அவ்விளையாட்டில் ஈடுபட்டவர் எழுந்து