உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டார வழக்குச் சொல் அகராதி

327

வருதல் அருமை. ஆதலால் அதன் வழி உண்டாகிய வழக்குச் சொல்லும் ஆகலாம்.

தாராளம்:

தார் என்பது படை. பகைவர் நாட்டில் செல்லும் படைஞர் தமக்கு அகப்பட்ட பொருள்களை எல்லாம் தமக்காக அள்ளிக் கொள்வதுடன் தம்மொடு வருவார்க்கும் கேட்பார்க்கு மெல்லாம் வழங்குதல் தாராளம் ஆகும். இது பொது வழக்கு. தாரி:

தார் என்பது நீண்டு குறுகிய நிலம். நெடும் போக்காக இருப்பது. அதன் வரப்பும் அதற்குத்தக நெடிது செல்லும். தாரி என்பது தாரியாம் நிலத்து வரப்புக்கு ஆகி, அது நடைவழி ஆதலால், நடைவழி என்னும் பொருளும் தருதல் மதுரை வழக்காகும்.

தாலி:

மகளிர் அணியும் தாலி பொதுவழக்குச் சொல். செம்மறி யாட்டின் கழுத்தின் கீழே இரண்டு தசைத் தொங்கல்கள் தொங்குவது உண்டு. அவற்றைத் தாலி என்பது ஆயர்வழக்கு. தாலி என்பது தொங்குவது என்னும் பொருளது. தால் - நாக்கு. தாலம் = LIM.

தாவடி:

தாழ்ந்த அடி என்பது தாவடி எனல் பொது வழக்கு. மரத்தின் தாழ்ந்த கிளையைத் தாவடி என்பது மதுரை மாவட்ட வழக்காகும். தாழ்வு > தாவு. எ-டு: வீழ்வு > வீவு.

தாவு:

வீழ்வு என்பது வீவு என்றும், வாழ்வு என்பது வாவு என்றும் வழங்குவது போல் தாழ்வு என்பது தாவு ஆவது வழக்கு. தாழ்வு = பள்ளத்தாக்கு, கிடங்கு. "மேடு தாவு பார்த்து வண்டியோட்டு” என்பது வேளாண் தொழில் வழக்கு. கழுத்தின் கண்டத்தின் கீழேயுள்ள குழியைத் தாவு என்றும் கூறுதல் உண்டு. தாவைப் பிடித்து நெரித்து விட்டான் என்பர். இவை தென்னக வழக்குகள்.

66

தாளி:

தாளியடித்தல் என்பது சங்கநூல் ஆட்சி. பயிர்களின் செறிவைக் குறைக்கப் பலகு என்னும் சட்டத்தை ஓட்டுதல்