உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

இளங்குமரனார் தமிழ்வளம்

1

தொடங்கட்டுதல்:

புறப்பட்டு ஒருவர் செல்லும் போது குழந்தையோ பிறர் ஒருவரோ உடன் தாமும் வருவதாகப் புறப்படுதல் தொடங் கட்டுதல் என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. தொடங்கும் வேளையில் தடையாதல் என்னும் பொருளது இது.

தொடல்:

தொடுத்த வளையங்களால் அமைந்த பின்னல் சங்கிலி. அது ‘தொடர்’ என்பது. தொடர்தலால் பெற்ற பெயர் அது. தொடுதல் என்பதும் தொடர்தலே ஆதலால் தொடல் என்பது சங்கிலி என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. “தொடர்ப்படு ஞமலி” (சங்கலியில் கட்டப்பட்ட நாய்) என்பது புறநானூறு.

தொடாம் பழம்:

தொடுத்து வைக்கப்பட்ட தொடர்போல் சுளைகளை யுடைய ஆரஞ்சுப் பழத்தைத் தொடாம் பழம் என்பது இலாலாப் பேட்டை வட்டார வழக்காகும். தொடராம் என்பது தாடாம் எனப் பேச்சு வழக்குப் பெற்றதாகலாம். தொடு கோல்:

அது

வளைந்த குரடு உடைய கம்பு தொடுவையாகும். தொடு கோல் எனக் கம்பம் வட்டாரத்தில் வழங்குகிறது. தொடுத்தடி, தொடுக்கம்பு எனவும் வழங்கும். தொடுவைக் கம்பு என்பது பொது வழக்கு.

தொடுதல்:

காலில் அணியும் மிதியடி போடுதல் தொடுதல் எனப்படும். மிதியடி தொட்டார் என்பர். கையால் தொடுதல் அன்றிக் காலால் தொடுதலுக்கும் ஆயது. கையில் தொடுக்கும் தொடி (வளையல்) என்பதை எண்ணலாம். மிதியடி போடுதலைத் தொடுதல் என்பது திருச்செங்கோடு வட்டார வழக்காகும். 'தொடு தோல்' (செருப்பு) என்பது இலக்கிய ஆட்சி.

தொடும்பு:

தோல் என்னும் பொருளில் தொடும்பு என்பது இறையூர் வட்டார வழக்கில் உள்ளது. தொடக்கு என்பது தசைப் பொருளது. தொடுதோல் என்பது செருப்பு. ஆதலால் தொடு