உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொல்வார்மீது வெறுப்பையும் சினத்தையும் விளைக்குமாதலின், 'குறிப்பறிந்து' என்றும், வேட்டையாடவும் உரிமை மகளிரொடு விளையாடவும் கருதியபோது, போர்தவிர வேறெச்செ-தியிலும் மனம் பதியாதாகலின், 'காலங்கருதி' என்றும் கூறினார். அரண்மனைப் பொற்கொல்லன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனை அவன் தேவி ஊடிய காலத்துக் கண்டதும், அவ் வூடல் நீக்குதற்கேதுவான செ-தியுடைமைபற்றியே,

"அறிகொன் றறியா னெனினு முறுதி

யுழையிருந்தான் கூறல் கடன்'

(638)

என்றமையால், இங்கு 'வெறுப்பில' என்றது வினைக்குரியன அல்லாதவற்றை யென அறிக. அரசர் தெ-வத்தன்மை யுடையவராதலின், இன்பமாகச் சுருக்கியும் விளக்கியும் சொல்லுக வென்பார் 'வேட்பச் சொலல்' என்றார்.

697. வேட்பன சொல்லி வினையில வெஞ்ஞான்றும்
கேட்பினுஞ் சொல்லா விடல்.

(இ-ரை.) வேட்பன சொல்லி - பெரும்பயன் படுவனவும் அரசன் விரும்புவனவுமான செ-திகளை அவன் கேட்டிலனாயினும் சொல்லி; எஞ்ஞான்றும் வினை இல கேட்பினும் சொல்லாவிடல் - எப்போதும் வினைக்குதவாத வீண் செ-திகளை அவன் கேட்பினும் சொல்லாது விடுக.

இதனால்,

"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்"

(200)

என்பது வற்புறுத்தப் பெற்றது. 'வினையில்' என்பதனால் வினையுள என்பதும், 'கேட்பினும்' என்பதனால் கேளாவிடினும் என்பதும், மறுதலைச் சொற்களாக வருவிக்கப்பட்டன. வினை யென்றது பயன்பாட்டை. 'கேட்டல்' சொல்லச் சொல்லுதலும் செவிகொடுத்தலும் ஆகிய இரு செயலும்பற்றியதாம். 'கேட்பினும்' எச்சவும்மை. 'சொல்லா' ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம்.

698. இளைய ரின்முறைய ரென்றிகழார் நின்ற
வொளியோ டொழுகப் படும்.

(இ-ரை.) இளையர் இனமுறையர் என்று இகழார் - இவர் எமக்கு இளையவர் என்றும், எமக்கு இன்ன முறையினர் என்றும், மதிப்புக் குறைவாகக்