உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

58

திருக்குறள்

தமிழ் மரபுரை


(இ-ரை) கேடு அறியா - புயல், வெள்ளம், நிலநடுக்கம், எரிமலை முதலிய இயற்கையாலும், பகைவரும் கொள்ளைக்காரருமாகிய மாந்தராலும், கெடுதலறியாததா-; கெட்டவிடத்தும் வளம் குன்றா நாடு - என்றேனும் ஒருகால் அரிதிற் கெட்டதாயினும் வளங் குறையாத நாடே; நாட்டில் தலை என்ப - எல்லா நாடுகள்ளுள்ளும் தலையாயதென்று கூறுவர் அறிஞர்.

நாடு கேடறியாமை கடவுள் வழிபாட்டாலும் அறவொழுக்கத்தாலும் அரசனாற்றலாலும் செங்கோலாட்சியாலும் ஆவதாம். வளம் நால்வகை நிலத்தும் இயற்கையாகவும் செயற்கையாகவும் விளையும் உணவும் பிறவுமாகிய பொருள் மிகுதி. குன்றாமையாவது நீர்வள நிலவள முண்மையால் முன் போன்றே விளைதல். நாட்டில் விளைவன நெல், வாழை, கரும்பு, மஞ்சள், இஞ்சி, வெற்றிலை, பாக்கு முதலியன; காட்டில் விளைவன எள், பயறு, தேன், அரக்கு, சந்தனம், புனுகு, காசறை(கஸ்தூரி) முதலியன: மலையில் விளைவன ஏலம், மிளகு, அகில், மருப்பு(தந்தம்), மரம், பொன், மணி முதலியன, கடலில் விளைவன உப்பு, மீன், இறா, சங்கு, முத்து, பவழம், ஓர்க்கோலை முதலியன. 'அறியா', 'குன்றா' என்பன ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

737. இருபுனலும் வா-ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு.

(இ-ரை.) இருபுனலும் - மேல்நீர் கீழ்நீர் எனப்பட்ட இருவகை நீர் வளமும்; வா-ந்த மலையும் - பலவகையிலும் பயன்படுவதற்கேற்றதா - வா-ந்த மலையும்; வருபுனலும் - அதனின்று வரும் ஆறும்; அரணும் இயற்கையுங் செயற்கையுமாகிய இருவகை வலிய அரணும்; நாட்டிற்கு உறுப்பு - சிறந்த நாட்டிற்குரிய உறுப்புகளாம்.

நிலத்தின் மேலுள்ள ஆற்று நீரும் குளத்து (ஏரி) நீரும் மேல்நீர்; நிலத்தின் கீழுள்ள கிணற்று நீரும் துரவு நீரும் கீழ்நீர். துரவு பெருங்கிணறு. நாட் டிற்கு எல்லையாகவும் அரணாகவும் வளநிலையமாகவும் உதவும் மலையை 'வா-ந்த மலை' என்றார்.

"அளக்க லாகா அளவும் பொருளும்
துளக்க லாகா நிலையுந் தோற்றமும்

வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே."

(நன். பொதுப்.28)

காடும் மலையும் ஆறும் கடலும் இயற்கையரணாம்; கோட்டையும் அகழியும் செயற்கையரணாம்.