LO
மகத்துப் பிள்ளை:
நெடு நாளாக மகப்பேறு இல்லாமல் இருந்து பின்னே மிக எதிர்பாத்துக் கிடந்து பிறந்த பிள்ளையை மகத்துப் பிள்ளை என்பது முகவை வழக்கு. அவ்வழக்கு பின்னே, தலைப் பிள்ளை என்னும் பொருள் தருவதாக வழங்குகின்றது. மகம்+அத்து= மகத்து. மகம்=விழா.
மங்கட்டை:
மனை என்பவை
மங்கல மகள், மங்கல விழா, மங்கல திருமணம் நன்மை என்னும் பொருள்வழிச் சொற்கள். மன்+கலம்=மன்கலம்> மங்கலம். “மங்கலம் என்ப மனை மாட்சி’ (திருக்.) மங்கல வாழ்வு இழந்தவள் மங்கட்டை வழங்கப்படுதல் நயினார் குறிச்சி வட்டார வழக்காகும்.
மச்சம்:
-
என
மச்சம் என்பது அடையாளக்குறி என்பது பொது வழக்கு. பருத்தி தவசம் வாங்கும் வணிகர் மச்சம் பார்ப்பது என்பது விளைவு - விலை - தரம் மதிப்பீடு குறித்துப் பார்ப்பது. ஒரு பானை சோற்றுக்கு ஓர் அவிழ் என்பது போன்றது அது. புலவை ‘மச்சம்' என்பது கொழுப் பூட்டம் கருதிய வழக்காகும். குறிகாரர் பார்க்கும் மச்சம் முதற்கண் கூறப்பட்டதில் அடங்கும்.
மச்சி:
ஒரு மாடு மலடாக ாக இருந்தால் அதனை மச்சி என்பது விளவங்கோடு வட்டார வழக்கு. மலடாதற்குரிய வழிகளில் ஒன்று வேண்டாத அளவுக்குக் கொழுப்பு அடைத்தல். மச்சி மச்சை என்பவை கொழுப்பு ஆதலால் கொழுப்பு என்னும் சொல்லை மலடு என்பதற்கு மக்கள் பயன்படுத்தினர். என்னும் உறவுப்பெயர் பொதுவழக்கு.
ப
மச்சி