168
திருக்குறள்
தமிழ் மரபுரை
உடம்பின்மேற் பற்றுவைப்பது, எதிர்காலத்திலேனும் இன்பநுகரலாம் என் னும் நம்பாசைபற்றி 'தொறூஉம்' ஈரிடத்தும் இன்னிசை யளபெடை. 'சூது' ஆகுபொருளது; உயிருக்கொத்தவன் சூதனேயாதலின். சூதன் சூதாடு வோன். ஏகாரம் பிரிநிலை.
அதி. 95 - மருந்து
அதாவது, அறம்பொரு ளின்பத்திற்குத் தடையா-ப் பகைபோல் நின்று வருத்தும் பல்வகை நோ-களையுந் தடுப்பனவும் தீர்ப்பனவுமான பல்வேறு நலப்பொருள் தொகுதி.
நோ வரும் வழிகள் அல்லது கரணியங்கள் பழவினை, முன்னோர் தொடர்பு, இயற்கை, ஒட்டுவாரொட்டு, ஊண், உடை, நஞ்சு, உறுப்பறை, வறுமை, பஞ்சம், செ-வினை, அச்சம், போர், இறைவன் முதலியன. தாக்கும் பகுதிபற்றி அகக்கரண நோ- புறக்கரணநோ-என நோ-கள் இரு பாற்படும்.
நோ-நீக்கும் மருத்துவ முறைகள் உட்கொள்வு, முகர்வு, பூச்சு, அணிவு, சுடுகை, ஒத்துகை, வேர்பிடிப்பு, குளிப்பு, அலுப்பு, மந்திரம், மந்திரத் தூக்கம் (Hypnotism), வழிபாடு, இறும்பூது(Miracle),
நம்பகம் (Faith)
வந்த
நோ-க்கு
முதலியனவாகப் பலதிறப்படும். பழவினையால் மருந்தில்லையென்பர். இறைவனால் வந்த நோ-க்கு மருந்தில்லையென்பர். இறைவனால் வந்தநோ- இறைவழிபாட்டால் நீங்கும். இவ் விருவகையு மல்லாத பிறவகை நோ-ப் பண்டுவமே (Treatment) இவ் வதிகாரத்தில் ஆசிரியராற் கூறப்பட்டுள்ளது.
மருந்து இயற்கை மருந்து செயற்கை மருந்து என இருவகைப்படும். வேருந் தழையும் போல்வன இயற்கை; மாத்திரையும் பாம்புணிக் கருங் கல்லும் போல்வன செயற்கை, தமிழ மருத்துவத்தில் இயற்கை மருந்துகளே பெரும்பான்மையாம். "வேர்பார், தழைபார், மெல்ல மெல்லச் செந்தூர நீறு (பற்பம்) பார் என்பது தமிழ மருத்துவப் பழமொழி. மருத்துவ வேருந்தழை யும் அவற்றாற் செ-யப்பட்ட கலவைகளும், பொதுவாகச் சிறப்பான நறு மணமுடைமையால் மருந்து எனப் பெயர் பெற்றன. மரு என்பது நன்மணம். மருக்கொழுந்து என்னும் உலக வழக்கையும், "மருவார் கொன்றை" (தேவா. 530:1) என்னும் செ-யுள் வழக்கையும் நோக்குக. மரு - மருந்து. சிறந்த மருந்துத் தழைகளெல்லாம் மலைகளிலிருப்பதாலும், மலைகளில் வாழும் சித்தரே அவற்றைப்பற்றிய அறிவில் தேர்ச்சி பெற்றிருந்ததினாலும், தமிழக