410
விற்சுளி (விச்சுளி):
―
இளங்குமரனார் தமிழ்வளம் 1
வில்லில் இருந்து விரைந்து செல்லும் அம்பு விற்சுளி என்பது. அவ்வாறு பாய்ந்து செல்லும் பறவை மீன் குத்தி அல்லது மீன் கொத்தி. சுள் > •ளி = விரைவு. விரைந்து பாயும் பாய்ச்சல் விற்சுளி எனக் கழையாட்டில் ஓர் ஆட் மாக நிகழும். விண்வெளி ஓடத்தில் இருந்து வெளியேறி மீண்டும் விண்வெளி ஓடத்தில் தாவிப் பற்றுவது போன்ற தாவுதல் அது. முந்நீர் விழா. விச்சுளிப்பாய்ச்சல் (கி.வா.ச.) பக்கம். 38
வீட்டிலாய்விடல்:
L
இரணியல் வட்டாரத்தில் பூப்புநீராட்டை வீட்டில் ஆய்விடல் என வழங்குகின்றனர். அதன்பின் அவள் வீட்டோடே இருப்பவள் என்னும் அக்கால வழக்கின் வெளிப்பாடு இது. வீணாய்ப் போதல்:
கைம்மை யுற்றவளை வீனாய்ப் போனவள் என்பது பார்ப்பனர் வழக்கு. ‘வீணாய் அவளா போனாள்?' என்பதை எண்ணின் வீணாக்கியவர் பட்டியல் எண்ணத் தொலையாது. படித்த கூட்டமெல்லாம் அப்பழிக்கு விலக்கு ஆக முடியாதே! வீரமக்கள்:
ர
க
தீக்குழி எனப்படும் பூக்குழி இறங்குபவரை வீரமக்கள் என்பது அந்தியூர் வட்டார வழக்கு. பூக்குழி இறங்கும் வீரமக்கள் நாங்களும் தாம் என்று நம்பாமதத்தரும் நாட்டி விட்ட நாள் இது.
வெக்களித்தல்:
வெக்கை என்பது வெப்பம், வெதுப்பம். ஈரம் காய்ந்த தன்மையைக் குறிப்பது அது. வேக்காடாக இருக்கும் பொழுதை வெக்களிப்பாக உள்ளது என்பதும் உண்டு. இது, ஈரலித்தல் என்பதற்கு எதிரிடைச் சொல்லாகும். தென்பகுதி வழக்குச் சொல் இது. வெண்டு:
வெண்டு என்பது முகவை நெல்லை வழக்குகளில் நரம்பு என்னும் பொருளுடன் வழங்குகின்றது. “சொன்ன படி கேட்க வில்லை வெண்டை எடுத்துவிடுவேன்” என்பது அச்சுறுத்தல் மொழி. வெண்டு என்பது மேல்மிதக்கும் தக்கை என்னும்