சொற்பொருள் நுண்மைவிளக்கம்
பற்றிச் செல்லத்தக்க வழிகாட்டியுமாம். தண்டபாணி விருத்தியுரை காண்க.)
பாை
ன்
7
(திருக்குறள்.11)
இதே பொழுதில், சேனாவரையர் “தமிழ்ச் சொல் வட க் கண் செல்லாது' என்றும், “வடசொல் எல்லாத் தேயத்திற்கும் பொது” என்றும் (தொல். சொல். 401) கூறுவதையும், "தமிழ் இனத்தவரான மலையாளிகள் இன்றும் பழைய உவா என்னும் சொல்லை மறந்து விடவில்லை. கறுத்த உவா, வெளுத்த உவா என்று அவர்கள் இன்றும் வழங்கி வருகிறார்கள். ஆனால் திராவிட மொழிகளில் மிகப் பழமை வாய்ந்த தமிழைப் பேசுகிற தமிழரோ, பழைய தமிழ்ச் சொற்களை மறைத்துவிட்டு, அமாவாசை, பௌர்ணமி என்னுஞ் சொற்களை வழங்கு கிறார்கள். சொந்தக் காசைப் பெட்டியில் வைத்து மறந்துவிட்டு அயலான் காசைக் கடன் வாங்கிச் செலவு செய்கிறவன் செயல் போல இருக்கிறது இவர்கள் செய்கை. பெட்டியில் உள்ள சொந்தக் காசை எப்போது வெளியில் எடுக்கப் போகிறார்கள்? பழைய காசு செல்லாக் காசாவதற்கு முன்பே வழங்குவதுதான் அறிவுடைமையமாகும்" (அஞ்சிறைத் தும்பி.48) என்றும், “குறவ என்னும் திராவிட மொழிச் சொல்லை வடமொழியாளர் கடனாகக் கொண்டு வழங்கி வருகிறார்கள். அவர்கள் இந்தச் சொல்லை அப்படியே உச்சரிக்க முடியாமல் 'கிராத’ என்று திரித்து வழங்குகிறார்கள். சம்ஸ்கிருதக்காரர் 'கொறவ’ என்னுஞ் சொல்லைத் தெலுங்கில் இருந்தோ கன்னடத்தில் இருந்தோ எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். கொறவ என்னுஞ் சொல்லே வடமொழியில் கிராத என்றாயிற்று. வடமொழியின் கிராத என்றால் வேடன் என்பது பொருள். கொறவ என்னுஞ் சொல் சம்ஸ்கிருதத்தில் கிராத என்றாயிற்று என்று கூறினால் சம்ஸ்கிருத மொழிப் பண்டிதர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். கிராத என்னுஞ் சொல்லில் இருந்து தான் கொறவ, குறவன் முதலிய சொற்கள் உண்டாயின என்று சண்டித்தனம் செய்வார்கள். ஆனால் ஆராய்ச்சி, உண்மையை வெளிப்படுத்தி விடுகின்றது” (அஞ்சிறைத் தும்பி.140) என்றும் அறிஞர் மயிலை.சீனி. வேங்கடசாமி கூறுவதையும் ஒப்பிட்டுணர்ந்து கொண்டு இச்சொல் வரிசையைப் பயன்படுத்துதல் பெருநலம் பயக்கும். பாவாணர் இயற்றியுள்ள வடமொழி வரலாறு என்னும் நூல் சேனாவரையரின் வடமொழிக் கருத்தைத் தவிடு பொடியாக்கிக் காற்றில் பறத்துதல் காண்க!
66
னி, ‘முந்நீர், யாற்று நீரும், ஊற்று நீரும், மழை நீரும், உடைமையால் கடற்கு முந்நீர் என்று பெயராயிற்று” என்று ஓர்