உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

17

அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல. அது ‘அ’ என்ற வழியும், மூவினங்களில் ஏறினவழியும் ஓசை சை வேறுபட்ட வாற்றான் உணர்க. (தொல். எழுத்து. 8. நச்.)

(2) மெய்க்கண் அகரம் கலந்து நிற்குமாறு கூறினாற் போலப் பதினோருயிர்க்கண்ணும் அகரம் கலந்து நிற்கும் என்பது ஆசிரியர் கூறார் ஆயினார். அந்நிலைமை தமக்கே புலப்படுத்தலானும் பிறர்க்கு இவ்வாறு உணர்த்துதல் அரிதாக லானும் என்று உணர்க. இறைவன் இயங்குதிணைக் கண்ணும் நிலைத்திணைக் கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது. (தொல். எழுத்து. 46. நச்.)

(3) அகரம் தானே நடந்தும், நடவா உடம்பை நண்ணியும் நடத்தலானும், அரன் அரி அயன் அருகன் என்னும் பரமர் திருநாமத்திற்கு ஒரு முதலாயும், அறம் பொருள் இன்பம் என்னும் முப்பொருளின் முதற் பொருட்கும் அருள் அன்பு அணி அழகு முதலாயின நற்பொருட்கும் முதலாயும் வருதலானும் அகரம் முன் வைக்கப்பட்டது. (நன். 72. மயிலை.)

(4) அகரம் மருத நிலத்தூர். மருதநிலம் வயற்பாங்கு. பார்ப்பனர் மருத நிலத்தில் தங்கினதினாலேயே அவர் குடி யிருப்பு அக்கிராகரம் எனப்பட்டது. அக்கிர அகரம் = அக் கிராகரம். அக்கிரம் - நுனி, முதல், தலைமை.

(ஒப்பியன் மொழிநூல். 146-147.)

அகலவுரை : சூத்திரத்துப் பொருளைத் தூய்மை செய் தற்குக் கடாவிடை உள்ளுறுத்து உரைக்கும் உரையெல்லாம் அகலவுரை எனக் கொள்க. (இறையனார். 1. நக்.)

அகவர் : அழைத்துப் பாடுவோர். அகவல் - அழைத்தல். குலத்தோர் எல்லோரையும் அழைத்துப்பாடுவோர்.

(மதுரைக் காஞ்சி. 223. நச்.)

அகவல் : அகவிக் கூறுதலான் (அழைத்தல்) அகவல் எனக் கூறப்பட்டது. அஃதாவது, கூற்றும் மாற்றமும் ஆகி ஒருவன் கேட்ப அவற்கு ஒன்று செப்பிக் கூறாது தாம் கருதிய வாறெல்லாம் வரையாது சொல்வதோர் ஆறும் உண்டு. அதனை வழக்கின் உள்ளார் அழைத்தல் என்றும் சொல்லுப; அங்ஙனஞ்