உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முகவுரை

Xi

திறவுகோல் தமிழிலேயே உள்ள என்னும் உண்மையை அவர் உணர்வாராயின், வியக்கத்தக்க உண்மைகள் வெளிப்படுவது திண்ணம். ஆதலால், அவர் இனிமேலாயினும் தக்கவாறு தமிழில் கவனத்தைச் செலுத்துவாராக.

இற்றைத் தமிழருள்ளும் நூற்றிற் கெண்பதின்மர் அறிகுறி களும் தாய்மொழியுணர்ச்சி யில்லாதவருமாயிருப்பதனாலும், ஆங்கிலங் கற்றாருட் பெரும்பாலார் தமிழிலக்கியங் கல்லாமை யாலும், கல்லூரிகளில் தமிழாசிரியப் பணிசெயப் புகும் இளைஞரும் தமக்குள்ள தமிழ்ப்பற்றை விளக்குமாறு பல்கலைக்கழகச் சூழ்வெளி ஆரியவணுக்கள் நம்பியிருப்பதனாலும், அரசியற் கட்சிகளுள் தி. மு. க. தவிர ஏனைய வெல்லாம் இந்தியை யேற்றுத் தமிழைப் புறக்கணிப்பதாலும், இன்று தமிழப் பண்பாட்டைப் பெரும் பாலும் தாங்கிநிற்கும் உயர்நிலைத் தமிழரான உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியரும், புதுத்தலை முறையாக முளைவிட்டுக் கவர்ந்தெழும் மாணவமணிகளும், புலவர்கல்லூரிகளிற் களிலும் மழபுலவரும், பட்டம்பெற்ற பல்கலைக்கழக ஆராய்ச்சி யிளைஞரும், இதைக் கருத்தூன்றிப் படித்து, செந்தமிழின் கூர்மதிநுட்பத்தையும் உணர்ந்து, தம்மை உணர்த்துவதுடன் தமிழையும் உலகமுழுதும் பரப்புவாராக.

இந்நூலைச் செவ்வையாக அச்சிட்டுத்தந்த, அச்சக உரிமையாளர் திரு. மு. நாராயணன் செட்டியார் ஆகியகட்கு, தமிழுலகனைத்தும் கடப்பாடுடையதாகும்.

சீராய்ப் பிழையின்றிச் செந்தமிழ்நூ லச்சிட்டு நேராய்த் தருபவர் நீணிலத்தில் - ஆராய்ந்து பாராய் பெருவழிப் பாரிப்பேர் அச்சகத்தார் நாரா யணன்செட்டி யார்.

எத்தனை மெய்ப்பேனும் இந்நூற் கிடயின்றி உய்த்தவை தாமும் உடன்திருத்தி - அச்சும் அகனமர்ந் திட்டார் அவருக்குக் கைம்மா றெவன்புரி கிற்பார் எமர்.

காட்டுப்பாடி,

ஞா. தேவநேயன்

(24-2-1967).