உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

15

வேமாற்றுக் கொள்கையை வலியுறுத்தவே, சாயுங்காலம், சாயுந்தரம் என்னும் “மொழிப் பொருட் காரணம்” தோன்றும் வடிவுகளை வேண்டுமென்றே காட்டாது விட்டிருக்கின்றனர்.

ஸாயம் என்னும் சொல்லிற்கு வடவர் பொருந்தப் பொய்த் தலாகக் காட்டும் வேர் முடித்தற் பொருளையுணர்த்தும் 'ஸோ' என்னும் சொல். அதுவும் சாய் என்பதனின்று திரிந்த சா என்னும் தென்சொல்லின் திரிபே.

(2) தா

இச் சொல் (இலவசமாகக்) கொடுத்தல் என்னும் பொருளில், வடமொழியில் தா(da) என்றும், இலத்தீனில் தோ(do) என்றும் வழங்குகின்றது. இதன் தமிழ்ப் பொருள் ஒத்தோனுக்குக் கொடுத்தல் என்பது.

99

"ஈதா கொடுஎனக் கிளக்கும் மூன்றும் இரவின் கிளவி ஆகிடன் உடைய. "அவற்றுள்,

ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே.'

“தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே.

99

99

"கொடுஎன் கிளவி உயர்ந்தோன் கூற்றே”

என்பன தொல்காப்பியம்.

(927-30)

புதுப் பெருக்கு நீரைக் குறிக்கும் வெள்ளம் என்னும் சொல் தன் சிறப்புப் பொருளையிழுந்து நீர் என்னும் பொதுப் பொருளில் மலையாளத்திலும், விடை சொல்லுதலைக் குறிக்கும் செப்பு என்னுஞ் சொல் தன் சிறப்புச் பொருளையிழந்து சொல்லுதல் என்னும் பொதுப் பொருளில் தெலுங்கிலும், வழங்குவது போன்றே; ஒத்தோனுக்குக் கொடுத்தலைக் குறிக்கும் தா என்னும் சொல்லுந் தன் சிறப்புப் பொருளையிழந்து கொடுத்தல் என்னும் பொதுப் பொருளில் ஆரிய மொழிகளில் வழங்குகின்ற தென்றறிக. தொன்று தொட்டு இருவகை வழக்கிலும் வழங்கி வருதலும், அடிப்படையைச் சேர்ந்த எளிய சொல்லாயிருத்தலும், சிறப்புப் பொருள் கொண்டு ஏனையிரு தூய தென்சொற்களுடன் தொடர்புடை மையும், தா என்பது தமிழ்ச்சொல்லே என்பதற்குத் தக்க சான்றுகளாம். தரவு, தருகை, தரகு, தத்தம், தானம் ஆகிய சொற்களெல்லாம் தா என்னும் முதனிலையினின்று திரிந்தவையே. இறுதி யிரண்டும் வட மொழியில் வழங்குவதனாலேயே வட சொற்போல் தோன்றுகின்றன.