உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

தமிழ் வரலாறு

நாட்டிலிருந்தது. கிறித்துவிற்குமுன் பாண்டி பாண்டி நாட்டு நாட்டு முத்து மேனாடுகட்கு ஏராளமாய் ஏற்றுமதியானதும், உரோம் நகரப் பெருமாட்டியர் அளவற்ற பொன்னை அதற்குச் செலவிட்டதும், வரலாறறிந்த உண்மையாகும். 'பாண்டிய கவாடம்' என்னும்

பருமுத்தவகை சாணக்கியரின் அர்த்த சாத்திரம் என்னும் பொருள்நூலிற் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. தொண்(நவ) மணிகளுள் ஒன்றான முத்து வெண்ணிறமுள்ள தென்பது, “சீர்கெழு வெண்முத்தம்” (பாலைக்கலி. 9) என்னும் செய்யுள் வழக்காலும், 'வாய்திறந்தால் முத்துதிர்ந்து விடுமா?” என்னும் உலக வழக்காலும் அறியப் படும்.

இனி, வேத ஆரியர் நாவலந்தேயத்திற்குள் (இந்தியா விற்குள்) கால்வைப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முந்திய பாபிலோனிய மொழியிலும், ஆரியம் என்னும் பேரே தோன்றுவதற்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முந்திய எகிபது மொழியிலும், மறுக்கமுடியாத தமிழ்ச் சொற்கள் அடிப்படையாயுள்ளன. ஆகவே, மேலையுலகில் (தோரா. கி.மு. 5,000) முதன்முதலாக நாகரிகமடைந்த எகிபது நாட்டு மொழியில், ஒருசொல் இருசொல் அல்ல, பல சொற்கள், அவையும் அடிப் படைச்சொற்கள், தமிழாயிருந்ததே தமிழின் தொன்மைக்குத் தலைசிறந்த இலக்கியச் சான்றாகும்.

எகிபதியத் தொல்வரலாற் றாராய்ச்சியாளரான வில்லியர்சு தூவர்ட்டு(Villiers Stuart) என்பவர், ஐரோப்பியரின் முன்னோருட் பெரும்பாலார் ஆசியாவினின்று பாபெல் மந்தேபு(Babel Mandeb) என் னும் நீரிணைப்பு(Straits) வழியாக ஆப்பிரிக்கக் கரையேறி எத்தியோப்பியாவில் சிலகாலந் தங்கியபின் எகிபது நாட்டு நீலாற்று வெளிநிலத்திற்குப் பரவினரென்றும், பின்பு அங்கிருந்து நண்ணிலக் கடல்(Mediterranean Sea) கடந்து ஐரோப்பாவிற் குடியேறி ஆரியராய் மாறினாரென்றும், எகிபதியர் பனையோலை போல் எழுது கருவி யாகப் பயன்படுத்திய பாப்பிரசு(papyrus) என்னும் தாள் அல்லது தோகையுள்ள நாணல் முதலில் அபிசினியாவிலேயே இயற்கையாய் விளைந்த தென்றும், எகிபதியரின் தேவியல் (Sacred) உயிரிகளும் 3ஆம் 4ஆம் 5ஆம் ஆள்குடி (Dynasty) அரசரின் கல்லறைச் சுவர் களில் வரையப் பற்ற விலங்குகளும் அபிசினியாவிற்கும் தன் னாப்பிரிக்காவிற்குமே யுரியவையென்றும், எகிபதியக் குறுநில அரசுகளை யெல்லாம் முதன் முதலாக ஒன்றாக இணைத்து ஓரரசு ஆட்சி நிறுவிய மெனெசு(Menes) வேந்தனும் தெற்கத்தியானே யென்றும், எகிபதிய மொழி ஐரோப்பிய மொழிகட்கெல்லாம் மூலமான அசைநிலை(Monosyllabic) மொழி யென்றும், அது சமற்கிருதத்திற்கு 3,000 ஆண்டுகட்கு முற்பட்ட தென்றும், தம் ‘ஓர் எகிபதிய அரசியின்