உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

தமிழ் வரலாறு

தமிழ்ச்சொற்களும் தமிழர் பழக்க வழக்கங்களும், கிரேக்க நாட்டில் மட்டுமன்றி உலகத்திற் பல இனத்தாரிடையும் காணப்படுவதாலும், கிரேக்க நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு திரவிட மொழியும் வழங்காமையானும்; தெர்மில என்னும் சொல்லைத் திர- இல்-அர் என்று பிரித்து, ‘கடற்கரையில் குடிகொண்டவர்’ என்று பொருள் கூறுவது, கேசவக்கிருட்டிணனே ஏசுக்கிறித்து என்று சொல்வதொக்கு மாதலானும்; ஒரே சொல்லின் ஒருபுடையொப் புமைபற்றி ஒரு நாட்டாரை ஐயாயிரம் கல் தொலைவிற்கப்பாற் பட்ட வேறொரு நாட்டினின்று வந்தவராகக் கொள்வது, மொழிநூன் முறைக்கு முற்றும் முரணானதாக லானும்; தோற்றம் முதல் இதுவரைப்பட்ட வளர்ச்சி நிலையெல்லாம் தொடர்பாகக் காட்டிக்கொண்டு தொன்றுதொட்டுத் தென்னாட்டிலேயே தமிழ் வழங்கி வந்திருத்த லானும்; கிரேக்க நாட்டு மூலக் கொள்கை மிகத் தவறான தென்று கூறி விடுக்க.

வங்க நாட்டில் திரவிடரேயன்றித் தமிழர் ஒருகாலும் வாழ்ந் திராமையானும், இற்றை வங்கமொழி ஆரிய வண்ணமாய் மாறி யிருத்தலானும், தமிழ் என்னுஞ் சொற்குத் தம்ரலித்தி என்னுஞ் சொல்லோடுள்ள தொடர்பு, காசி என்னும் பெயர்க்குக் காஞ்சி யென்னும் பெயரோடுள்ள தொடர்பே யாதலானும்; தம்ரலித்தி (அல்லது தமிலப்தி அல்லது தமிலூக்) என்னுஞ் சொல்லினின்று தமிழ் என்னும் பெயர் வந்ததென்பது சிறிதும் பொருந்தாது.

தமிழர் நாகரிகமடைந்த காலந்தொட்டுத் தமிழகம் சேர சோழ பாண்டியராட்சிக் குட்பட்ட முத்தமிழ்நாடாயிருந்து வந்தமை யானும், கி.மு. 7ஆம் நூற்றாண்டினரான தொல்காப்பியரும்,

"வண்டமிழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெயர் எல்லை யகம்

(தொல்.1336)

என்று கூறுதலானும், வரலாற்றுக் காலம் நெடுகலும் இலங்கை அயலாராட்சிக்குட்பட்ட ஒரு குடியேற்ற நாடாகவே கருதப் பட்டு வருதலானும்; தமிழ் என்னும் பெயர் குமரிக் கண்டத்திலேயே தோன்றி விட்டமையானும்; தாமமெல்லாம் அல்லது தாமீழம் என்பது இலங்கையை நோக்கிப் புதுவதாகப் படைத்த பொருந்தாப் புணர்ப்பாதலாலும்; அப் புணர்ப்புச் சொல்லினின்று தமிழென்னும் பெயர் தோன்றிற்றென்பது, நாட்டுப்பற்றினா லெழுந்த விருப்பக் கருத்தேயன்றி வேறன்று.

தமிழ் ஒப்புயர்வற்ற தென்னுங் கருத்து ஏனைய மொழிக ளெல்லாந் தோன்றியபின், அவற்றோடு தமிழை ஒப்புநோக்கி அதன் உயர்வு கண்டு அதற்குத் தமிழ் எனப் பெயரிட்டன ரென்று, அப்