இயனிலைப் படலம்
(4) உகரச்சுட்டடியாய்ப் பிறந்தது (எதிர்காலம்)
உது. எ-டு: செய்யுது, கூறுது, வருது.
35
உது ஈறு துவ்வளவாகக் குறுகி, அடிநீண்ட லகர ளகரவீற்று வினைமுதனிலைகளோடு கூடும்போது, றுகர டுகரமாகத் திரியும்.
எ-டு: செல்-சேல்+து = சேறு. கொள்-கோள்+து = கோடு.
ஒ.நோ: செல்-சேல்+தல் = சேறல் (தொழிற்பெயர்) கொள்-கோள்+தல் = கோடல் (தொழிற்பெயர்).
தன்மைப்பன்மை மீறுகள்
(1) தன்மைப் பன்மைப் பெயர்களினின்று தோன்றியவை. ஏ-எம், (நாம்) - ஆம்-அம், ஆம்-ஓம்.
(2) செய்து என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையினின்று தோன்றியவை.
து+உம் (பன்மையீறு)=தும்.
தும் - டும். தும் - றும்
-
(3) எதிர்கால வினைமுற்றினின்று தோன்றியது.
கு+உம் (பன்மையீறு)=கும்.
(4) உகர்ந்தாய் பிறந்தது (எதிர்காலம்), எ-டு: செய்யுதும், கூறுதும், வருதும். து-று. சேறு+உம் (பன்மையீறு)=சேறும். து-டு. கோடு+உம்(பன்மையீறு)=கோடும்.
(5) செய்யும் என்னும் முற்றினின்று தோன்றியது. செய்யும்-உம்.
முன்னிலைவினை யீறுகள்
முக்கால நிகழ்ச்சிவினை யீறுகள்
முன்னிலைப் பெயர்களினின்று தோன்றியவை.
ஒருமை (நீ)-ஈ-
ஈ ஏ ஐ -ஆய்.
எ-டு : வந்தீ - வந்தே - வந்தை - வந்தாய். ஒ.நோ: சீ-சே-சை(இகழ்ச்சிக்குறிப்பு). உரை - உராய், குழை-குழாய்.