உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

இனி,அப்படை வடுகரையும் துணைக்கொண்டு வந்ததென்பது,

66

முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் தென்றிசை மாதிரம் முன்னிய வரவிற்கு விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத் தொண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த அறையிறந்து

என்னும் மாமூலர் கூற்றால் தெரிய வருகின்றது.

(அகம்.281)

ஆகவே, வடுகர் கோசர் மோரியர் என்னும் மூவின மறவரைக் கொண்டது அப் படை என்பதை அறியலாம். வடுகரையும் கோசரையும் புறங்காணின் மோரியர் தாமே புறங்காட்டுவர் என்பதை அறிந்த சோழன் இளஞ்சேட் சென்னி, தன் நாட்டைக் காக்கும் கடமையை யுணர்ந்து, முன்பு “வளங்கெழு கோசர் விளங்குபடை நூறி” (அகம்.205), பின்பு கொண்கானஞ் சென்று பாழியரணை யழித்து ஒரே யடியாக மோரியரைத் தமிழகத்தினின்று துரத்திச் செருப்பாழி யெறிந்த” என்னும் விரு அடைமொழியும் பெற்றான்.

66

தனை,

66

எழாஅத் திணிதோட் சோழர் பெருமகன் விளங்குபுகழ் நிறுத்த இளஞ்சேட் சென்னி குடிக்கட னாகலிற் குறைவினை முடிமார் செம்புறழ் புரிசைப் பாழி நூறி வம்ப வடுகர் பைந்தலை சவட்டி'

99

(அகம்.375)

என்பதனால் அறியலாம். அவன் “வடவடுகர் வாளோட்டிய” (புறம்.378) செயல் சற்றுப் பிந்தினதா யிருக்கலாம். வடவடுகர் கலிங்க நாட்டுத் தெலுங்கர்.

கீரந்தையின் வீட்டுக் கதவைத் தட்டி, அதனால் வேண்டாது தன் கையைக் குறைத்துக்கொண்ட பொற்கைப் பாண்டியனும், மகனை முறை செய்த மனுமுறை கண்ட சோழனும், கி.மு.2ஆம் நூற்றாண்டினரா யிருந்திருக்கலாம்.

மனுமுறை என்றது வடமொழி மனுதரும சாத்திர முறையையன்று. அந் நூலின் காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டு. அதற்கு முன் தோன்றிய ஆரிய தருமநூல்களும், நடுநிலையின்றிக் குலத்திற் கொருமுறை கூறுவனவே. கன்றைக் கொன்றதற்குக் கழுவாய் அல்லது தண்டனை யென்னென்று சோழன் வினவிய போது, பொற் கன்று செய்து பிராமணர்க்குக் கொடுத்து, ஆநிரையொடு காடு சென்று ஒரு மாதம் புன்மேய்ந்து வரவேண்டுமென்று பிராமணர் கூறினர். அதை அவன் ஒப்புக்கொள்ளாது, உயிருக்குயிரேயீடென்று தன் மகன்மேல் தேரேற்றிக் கொன்றான். வடநூல்களிற் கதிரவன்குல அரசருள்