உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருக மாந்தரும்"

கஞ்ச காரரும் செம்புசெய் குநரும் மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும் கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும் பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும் துன்ன காரரும் தோலின் துன்னரும்

கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்

99

(சிலப்.5:16-7)

பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும் (சிலப்.5:29-34) வேறு பல தொழிலாளரும் தழைத்தோங்கச் செய்தான். ஆயின், அவனும் ஆரியர் சாய்கடையில் வீழ்ந்து,

அறமறக் கண்ட நெறிமா ணவையத்து முறைநற் கறியுநர் முன்னுறப் புகழ்ந்த தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு பருதி யுருவிற் பல்படைப் புரிசை யெருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண் வேத வேள்வித் தொழின்முடித் தது

மிகமிக வருந்தக் தக்கதே.

99

(புறம்.224)

கி.பி. 2ஆம் நூற்றாண்டினரான ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியனும், கண்ணகிக்குப் படிமை சமைத்த சேரன் செங்குட்டு வனும், தமிழினத்தின் பெருமையைக் காத்ததனாற் பாராட்டத் தக்கவரே.

ஆரியப் படை என்றது ஆந்திரப்பேரரசின் (கி.மு.567-கி.பி.220) வடுகப் படையை. வட நாட்டில் அல்லது வடக்கில் உள்ளவரையெல் லாம் ஆரியரென்னும் வழக்கு இடைக்காலத்தில் எழுந்துவிட்டது. ‘ஆரியக்கூத் தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு” என்னும் பழமொழியில், ஆரியக்கூத் தென்றது வடுகரின் கழைக்கூத்தையே.

66

புதைய லெடுத்தவ னென்று சிறையிலிடப்பட்ட வார்த்திகனை விடுதலை செய்தபின், நெடுஞ்செழியன்

66

நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி

அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென் இறைமுறை பிழைத்தது பொறுத்தல்நும் கடனென

(சிலப்.23:115-7)

மன்னிப்புக் கேட்டதுடன்,

99

66

தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன்

99

மடங்கா விளையுள் வயலூர் நல்கியதே

(சிலப்.23:118-9)