உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

ஒளிதிகழ் முத்தம் விறலியர்க் கீத்து நார்பிழிக் கொண்ட வெங்கட் டேறல் பண்ணமை நல்யாழ்ப் பாண்கடும் பருத்தி'

"

என்னும் உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாட்டும்,

இன்று செலினுந் தருமே சிறுவரை

நின்று செலினுந் தருமே பின்னும் முன்னே தந்தனென் என்னாது துன்னி

வைகலுஞ் செலினும் பொய்யல னாகி

யாம்வேண்டி யாங்கெம் வறுங்கலம் நிறைப்போன்

தான்வேண்டி யாங்குத் தன்னிறை யுவப்ப

அருந்தொழில் முடியரோ திருந்துவேற் கொற்றன் இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும் களமலி நெல்லின் குப்பை வேண்டினும்

அருங்கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே

(புறம்.170)

(புறம்.171)

என்னும் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாட்டும், குதிரைமலைக் குறவர் வாழ்க்கையையும், கொற்றன் கொடைத் திறத்தையும் தெளியக் காட்டும்.

குதிரைமலைப் பகுதியிலுள்ள வடகரை மேற்கரை என்னும் இடப்பெயர்கள், இன்று ‘படகரா’, ‘மர்க்கரா' என்று உருமாறி வழங்குகின்றன.

குதிரைமலை நாட்டுத் தலைநகர்ப் பெயரான கொற்றன் கருவூர் என்பது, இன்றும் 'கொத்த கனவூர்' என்று வழங்கி வருவதாகப் பேரா. ஔவை சு.து. கூறுவர். வ

ருங்கோவேள்

கொண்கானத்தின் வடபா லிருந்தது கடம்பரின் பங்களநாடு. அவ்விரு நாடுகட்கும் கிழக்கில் குடமலைத்தொடரின் கீழ்பால் இருந்தது வேளிரது வேணாடு. அந் நாட்டுத் துவரை நகரைத் தலைநகராகக் கொண்டு இருங்கோவேள் ஆண்டு வந்தான்.

66

உவரா வீகைத் துவரை யாண்டு

நாற்பத் தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே

என்று கபிலர் பாடுதல் காண்க.

(புறம்.201)

துவரை (துவாரசமுத்திரம்) இன்று எருமையூர் நாட்டைச்

சேர்ந்தது.