உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

பாணர் இசைத்தொழிலை இழந்ததனால், பல இசைத்தமிழ் நூல்களும் இறந்தொழிந்தன. சதுரப்பாலை திரிகோணப் பாலை என்னும் பண் திரிவு முறைகளையும், அகநிலை மருதம், புறநிலை மருதம் முதலிய பண்நுட்பங்களையும் விளக்குவார் இன்று எவரும் இல்லை.

சென்னை இராயபுரம் பாதாள விக்கினேசுவரர் கோவில் தெருவி லுள்ள சுப்பிரமணியம் என்னும் இசைவாணர், புதுக்கோட்டைத் தட்சிணாமூர்த்தியார்போற் கஞ்சுரா இயக்கினும், ஒரு முடிதிருத் தாளன் மகனார் என்பதுபற்றி, அவரை அரங்கிற் கழைப்பார் ஒருவருமில்லை.

தனித்தமிழ்ப் புலவர் இழப்பு: மறைமலையடிகள் வழிப்பட்ட தனித்தமிழ்ப் புலவர், எத்துணைப் புலமையும் ஆராய்ச்சியும் உடைய வராயிருப்பினும், ஆரியத்திற்கு மாறானவர் என்னுங் கரணியத்தால், அரசியல் திணைக்களத்திலும் பல்கலைக்கழகத்திலும் அமர்த்தப் பெறுவதில்லை.

ஊர்ப்பெயர் மாற்றம்

தமிழ்நாட்டை ஆரியப்படுத்தற்குப் பல ஊர்ப் பெயர்கள் வட

சொல்லாக மாற்றப்பட்டுள்ளன.

எ-டு

தென்சொல்

குடமூக்கு குடந்தை

-

குரங்காடுதுறை

சிலம்பாறு

சிற்றம்பலம்

பழமலை, முதுகுன்றம்

புள்ளிருக்கு வேளூர்

வினைதீர்த்தான் கோவில்

வடசொல்

கும்பகோணம்

கபித்தலம்

நூபுரகங்கை சிதம்பரம்

விருத்தாசலம்

வைத்தீசுவரன் கோயில்

பொருநை

மயிலாடுதுறை

மரைக்காடு - மறைக்காடு

தாம்பிரபரணி

மாயூரம்

வேதாரணியம்

வடமொழியை யெதிர்த்து வெல்லும் வலிமை தமிழுக்கே

யிருப்பதால், ஆரியக் கட்டுப்பாடு தமிழ்நாட்டிலேயே மிகக்

கடுமையாகப் புகுத்தப்பட்டுள்ளது.