உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

முப்பெயரும்

வீட்டுப் பூனையின் மொழிகளிற் பரவி வழங்குகின்றன.

53

மேலையாரிய

பூசை-E. puss, pus, pusse, Du. poes, LG. puns, Sw. pus, Norw. puse, puus, Lith. puz, puiz, Ir. and Gael. pus.

E. pussy, pussie, pussey, Sc. poussie, poosie. “வெவ்வாய் வெருகினைப் பூசை யென்றலும்” (தொல். மர. 19). பில்லி- L. feles. கொத்தி-E. cat, Gk. katta, kattos, L. catta, catus, It. gatto, Sp., Pg. gato, Cat. gat, Pr. cat, ONF. cat, F. chat, OE. cat, catt, ON kott-r, Sw. katt, Da. kat, OE. catte, WGer. katta, MLG. katte, MDu. katte, kat, Du. kat, Sw. katta, OHG. chazza, (MHG. mod. G. katze), fem.

OIr. cat, Gael cat, Welsh and Cornish cath, Breton kaz, Vannes kach, Slav. kot, OSlav kot'ka, Bulg. kotka, Slovenish kot, Russ. kot, Polkot, Boh. kot, Sorabian kotka, Lith. kate, Finnish katti.

Pussy என்ற சொற்கு வேர் தெரியவில்லை யென்றும், cat என்ற சொற்கு வந்த வழி தெரியவில்லையென்றும், பிரித்தானியக் கலைக் களஞ்சியம் கூறுகின்றது.

இனி, பூனையைக் குறிக்கும் இரு வடசொற்களும், தென் சொல்லினின்று பிறந்தவையேயாம்.

மார்கார அல்லது மார்ஜால என்னும் பெயர் கழுவுவது அல்லது துடைப்பது என்று பொருள்படுவதால், பூசை யென்னும் தென் சொல்லின் மொழிபெயர்ப்பேயன்றி வேறன்று. வ. ம்ருஜ் கழுவு, துடை, துப்புரவாக்கு.

=

இனி, விடால என்னும் சொல்லும் விடரவன் என்னும் தென் சொல்லின் திரிபே யென்பது, ஆய்ந்து பார்ப்பின் தெளிவாம்.

பூனையின் பகற்கண் நடுவில் தோன்றும் திறப்புக் கீற்று ஒரு விடர் போலிருப்பதால், பூனைக்கு விடரவன் என்றும் ஒரு பெயர் (யாழ். அக.) உண்டு. விடர் பிளப்பு.

விடரவன் விடரகன்

-

வ. விடாரக- விடாலக

பிடால.

-

விடால

பூனைக்கண் நிறமுள்ள ஒரு மணிவகைக்குப் பூனைக்கண் (cat's eye) என்பது உவமையாகு பெயர். இக் கரணியம்பற்றியே விடார என்னும் வடசொல்லினின்று வடூர்ய என்னும் பயர் திரிந்துள்ளது. விடாரக -விடார -வைடூர்ய. மாக்கசு முல்லர் இச் சொற்குக் கூறியுள்ள பொருட்கரணியமும் இதுவே.