உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

தமிழ் இலக்கிய வரலாறு

வடநாட்டிற் குடியேறிய முழு ஆரியக் கூட்டத்தாரே

சின்னஞ்சிறு பான்மையர். அதனால் அவர் மொழி பழங்குடி மக்கள் மொழியொடு இரண்டறக் கலந்து, எகர ஒகரக் குறிலிழந்து, பிராகிருதப் பான்மை பெற்றுவிட்டது. அங்ஙன மிருக்க, ஆரியப் பூசகர் மட்டும் இரண்டொருவர் அல்லது நாலைவர் தென்னாடுவந்து எங்ஙனம் தமிழப் பேரினத்தை நால்வேறு தொழிற்குலங்களாக முதன்முதல் வகுத்திருக்க முடியும்?

ஆங்கிலராட்சிக் காலத்தில் எங்ஙனம் ஓர் ஆங்கி லேயனைக் காணினும் ஆயிரக்கணக்கான இந்தியர் அல்லது தமிழர் அஞ்சியடங்கி நின்றனரோ, அங்ஙனமே ஆரியனைக் கண்ட போதும் நின்றனர். இம்மையில் உடலைமட்டும் தாக்கிய ஆங்கில மாந்தன் அதிகாரம் அத்துணை வல்லமையுள்ள தெனின், இம்மையிலும் மறுமையிலும் உடம்பையும் ஆதனை யும் (ஆன்மா வையும்) ஒருங்கே தாக்கும் நிலத்தேவன் அதிகாரம், எத்துணை வல்லமையுள்ள தாயிருந்திருக்கும்! அன்று கொல்லும் கண்கண்ட தெய்வங்களாகிய மூவேந்தரே, தேவனென்று நம்பி நெடுஞ் சாண் கிடையாய் விழுந்து வணங்கிய போது, அவர் கட்டளை வழி நிற்கும் பேதைக் குடிகள் எங்ஙனம் மீறி நடக்க வொண்ணும்? அறிவாராய்ச்சியும் கண்திறப்பும் மிக்க இக் காலத்திலும், ஆரிய ஏமாற்றும் தமிழ ஏமாறலும் தொடர்ந்து நடைபெறின், அக்காலத்தில் இந் நிலைமை எத்துணை மடங்கு மிக்கிருந் திருக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமோ ?

ஆரிய உவச்சனை நிலத்

ஆரிய மூலமுதல் மறையாகிய இருக்கு வேதத்தில் 9ஆம் மண்டலம்வரை, நால்வரணப் பகுப்பைப்பற்றி எவ்வகைக் குறிப்புமில்லை. இறுதியதாகிய 10ஆம் மண்டலத்தில்தான் முதன் முறையாக புருட சூத்தம் (புருஷ சூக்தம்) என்னும் மந்திரத்தில்,

“பிராமணன் இறைவனது வாய் ஆயினன்; சத்திரியன் (ராஜந்யன்) அவனுடைய அவனுடைய தோள்கள் ஆயினன்; வைசியன் அவனுடைய தொடைகள் ஆயினன்; சூத்திரன் அவனுடைய பாதங்களில் தோன்றினான்” என்று கூறப்பட்டுள்ளது.

கி.மு.1300-ற்கும் 1200-ற்கும் இடைப்பட்ட இராமனாட் சியில், சம்புகன் என்னும் சூத்திரன் தவஞ்செய்ததனால் ஒரு பிராமணனின் பிள்ளை இறந்ததென்று, அவன் கொலைத் தண்டம்

டப்பட்டான்.

ம்

கி.மு. 1200-ற்கும் 1000-ற்கும் இடைப்பட்ட பாரதக் காலத்தில் துரோணன் என்னும் பிராமணன் விற்பயிற்றும் சத்திரியத் தொழில்