உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

203

அம்பிகாபதி கோவை

து

பாட்டுடைத்தலைவனின்றி 564

துறைகளைக்

கொண்டது. இவற்றுட் சில புதியனவாகப் புனையப்பட்டவை. இக் கோவை யாசிரியர் பெயர் தெரியவில்லை.

கம்பர் இயற்றியவை

ஏரெழுபது, திருக்கை வழக்கம், சிலையெழுபது முதலியன.

சூடாமணி உள்ளமுடையான்

து திருக்கோட்டியூர்நம்பி இயற்றிய கணியநூல்.

நளவெண்பா

13ஆம் நூற்றாண்டு

இது புகழேந்திப் புலவர் நளன் கதையைப்பற்றி 424 நேரிசை வெண்பாவாற் பாடியது. “வெண்பாவிற் புகழேந்தி” என்னும் பாராட்டு இவரது வெண்பாவியற்றுந் திறமையைக் காட்டும். திருக்குறள் பரிமேலழகர் உரை

பரிமேலழகர் திருக்குறட்கு ஆங்காங்கு ஆரியச் சார்பாக உரை கூறியிருப்பினும், அவருடைய செந்தமிழ் நடையும் நுணுகிய நோக்கும் பிறருரை மறுப்பும் பெரிதும் பாராட்டற் பாலனவே.

குலோத்துங்கச்சோழன் கோவையும் சங்கரச்சோழன் உலாவும் இந் நூற்றாண்டின.

சித்தராரூடம்

இது ஒரு நஞ்சு மருத்துவநூல். ஆசிரியர் பெயர் தெரிய

வில்லை.

உரிச்சொல் நிகண்டு

14ஆம் நூற்றாண்டு

இது காங்கேயர் வெண்பா யாப்பில் தொகுத்தது. கருமாணிக்கங் கப்பற்கோவை

இதற்குக் கப்பலூர் வள்ளல் பாட்டுடைத்தலைவர். ஆசிரியர்

பெயர் தெரியவில்லை.