உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

207

"கழியுந் தியகட லுப்பென்று நன்னூற் கடலின் மொண்டு வழியும் பொதிய வரையினிற் கால்வைத்து வன்கவிதை மொழியும் புலவர் மனத்தே இடித்து முழங்கிமின்னிப்

பொழியும் படிக்குக் கவிகாள மேகம் புறப்பட்டதே.

என்று அதிமதுர கவிராயர்முன் அவர் கூறிய நெடுமொழி யாலும், "ஆசுக்குக் காளமுகில் ஆவனே’ என்னும் பிறர் கூற்றாலும் அறியலாம்.

பிறர் குறித்த குறிப்பனைப்படி பல புலவர் பாடியிருப் பினும், என்ன குறித்தாலும் அன்ன குறிப்பனைப்படி அரிகண்டமும் எரிகண்டமும் (எமகண்டமும்) பாடுவதும், அவையல் கிளவியாகிய இடக்கர்ச் சொற்களைக் குறிப்பினும் அவற்றைப் பிறசொல்லொடு புணர்த்தி இடக்கரகற்றிப் பாடுவதும், காளமுகிற்கே யுரிய தனிச்சிறப்பாற்றலாகும்.

மேற்கூறிய பாக்களிற் சில மதக்கருத் துள்ளனவேனும், குறிப்பனைப் பாட்டுகளாதலால் இங்குக் கூறப்பட்டன. இரட்டையர்

முறையே, மருகன் அம்மான் முறையினரும், குருடரும் முடவருமாகப் பிறந்தவரும், இளஞ்சூரியன் முதுசூரியன் என்னும் பெயரினருமான இரு புலவர், இரட்டையர் என்றும் இரட்டைப் புலவர் என்றும் சொல்லப்படுவர். இவருள் குருடர் முடவரை எங்குந் தோளில் தூக்கிச்செல்ல, முடவர் ஒன்றைக் கண்டவுடன் நாலடிப் பாவில் முன்னீரடியைப் பாடியபின், குருடர் அதன் பொருளை யறிந்து பின்னீரடியையும் பாடி முடிப்பர்.

இவர்கள் பாடின தனிப்பாக்களுட் சில வருமாறு : "தேங்குபுகழ் ஆங்கூர்ச் சிவனேயல் லாளியப்பா நாங்கள் பசித்திருக்கை நாயமோ போங்காணும் கூறுசங்கு தோல்முரசு கொட்டோசை யல்லாமல் சோறுகண்ட மூளியார் சொல்.

99

-

து ஆங்கூர்ப் போற்றியானின் (அர்ச்சகனின்) திருட்டுத் தனத்தை வெளிப்படுத்தியது.

"தேன்பொழியும் வாயான் திருவேங்க டேசனுடன் ஏன்பிறந்தான் இந்த இனியன்காண் - யான்சொலக்கேள் சீதேவி யார்பிறந்த செய்யதிருப் பாற்கடலுள்

மூதேவி யேன்பிறந்தாள் முன்.

99

து ஈகையில்லாத் தம்பியைப் பழித்தது.