உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

சீவல மாறன் கதை

தமிழ் இலக்கிய வரலாறு

து அதிவீரராம பாண்டியன்மீது சிதம்பரநாத கவிஞர்

பாடியது.

தினகர வெண்பா

இது தினகர வள்ளலைப் புகழ்ந்து நாகராசன் பாடியது. ஒளவையார்

கடைக்கழகக் காலத்திலிருந்து 16ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தோன்றிய ஔவையார் எழுவர்.

(1) கடைக்கழக ஔவையார் (கி.பி. 2ஆம் நூற்றாண்டினர்) அதிகமானால் தொண்டைமானிடம் தூதுபோக்கப்

பட்டவர்.

(2) அங்கவை சங்கவை கால ஒளவையார்

(3) சேரமான் பெருமாள் நாயனார் கால ஒளவையார் (8ஆம் நூற்றாண்டினர்)

(4)

(5)

(6)

கம்பர் கால ஔவையார் (12 ஆம் நூற்றாண்டினர்)

அறிவைக்குறள் ஒளவையார் (14ஆம் நூற்றாண்டினர்) ஆத்திசூடி ஔவையார் (16ஆம் நூற்றாண்டினர்)

(7) பந்தனந்தாதி ஔவையார் (17ஆம் நூற்றாண்டினர்) ஆறாம் ஒளவையார் இயற்றியவை, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை முதலிய நன்னெறிச் சுவடிகள்.

வான்கோழி துருக்கிநாட்டினின்று இந்தியாவிற்குக் காண்டு வரப்பட்டது 16ஆம் நூற்றாண்டாதலால், அதைப் பாடிய ஒளவையார் அறநூல் அதன் வரவிற்குப் பிற்பட்டது என்பது கால்டுவெல் ஐயர் கருத்து.

அம்மை-அவ்வை (தாய், பாட்டி)-ஔவை (ஒரு புலத்தியார் பெயர்). ஒரு பொதுப்பெயர் இயற்பெயராகும்போது எழுத்து மாறுவது நன்றே. இவ் வழக்கை ஆங்கிலர் செருமானியர் முதலிய மேலையர் பெயர்களிற் காணலாம்.

நீதிவெண்பா

இது 100 வெண்பாக் கொண்ட அறநூல். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.