உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம்

225

வேனிற்காலத்திற் கிளம்பும் வெப்பக் கொப்புளநோய், அம்மை என்னுங் காளியால் ஏற்படுவதென்னும் மூடக் கொள்கையால் அம்மை யெனப் பெயர்பெற்றது. அந் நோய்பற்றி எல்லா மக்களும், போரில் வெற்றிதரும் தெய்வம் ( கொற்றம் + அவ்வை = கொற்றவ்வை-கொற்றவை) என்பதுபற்றிச் சிறப்பாக எல்லா அரசரும், காளியை வணங்கினர்.

=

(

காளி என்னுஞ் சொல் வடமொழியிற் காலீ என்று திரியும். இத் திரிவைத் தென்சொல்லிற்கு மூலமாகச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகர முதலியிற் குறித்திருப்பது துணிச்சலான ஏமாற்றே.

கீழை யாரியர் இந்தியாவிற்குள் வந்தபின், முதன் முதலாகத் தோன்றிய இலக்கியம் இருக்கு வேதமந்திரத் திரட்டே. அதினின்று வேள்வியியற்றுதல் பற்றிய மந்திரங்களைத் தொகுத்து எசுர் என்றும், வேள்வியிற் பாடவேண்டிய மந்திரங்களைத் தொகுத்துச் சாமம் என்றும் பெயரிட்டனர். அம் மூன்றுஞ் சேர்ந்து வேதத்திரயம் எனப் பட்டது. அதன்பின், ஆக்க வழிப்புக் கோரும் அதர்வம் என்னும் மந்திரத் திரட்டுத் தோன்றிற்று. பின்னர் நான்கையுஞ் சேர்த்துச் சதுர்வேதம் என்றனர்.

வேத மந்திரங்களைப் பயன்படுத்துவதும், வேள்வி களியற்று வதும்பற்றிய முறைகள், பல்வேறு குறியீட்டுப் பொருள், பலவகைச் சடங்குகளின் மரும விளக்கம், எடுத்துக்காட்டுக் கதைகள், முதலிய வற்றைக் கூறும் பிராமணம் என்னும் உரைநடைப் பகுதிகள் நால் வேதத்திற்கும் நாளடைவில் எழுந்தன.

வேதக்காலத்தில், வடஇந்தியாவிற் பிராகிருதரும் திரவிட ரும் தமிழரும் இருந்ததனால், தமிழரிடமிருந்து இலக்கணம் கணியம் முதலியவற்றை ஆரியப் பூசாரியர் கற்றுக் கொண்டு வேதாங்கம் என்னும் அறுவகை வேத வுறுப்பு நூல்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தோற்றுவித்துக் கொண்டனர். அவையாவன:

(1) சிட்சை (சிக்ஷை-எழுத்திலக்கணம்), (2) சந்தசு (சந்தஸ்- யாப்பிலக்கணம்), (3) வியாகரணம் (சொல்லிலக்கணம்), (4) நிருக்தம் (அருஞ்சொல் விளக்கம்), (5) சோதிடம் (ஜோதிடம்- கணியம்), (6) கல்பம் (சடங்குச் சுவடி).

அண்ணாமலை பல்கலைக்கழகத்திற் சமற்கிருதப் பேராசிரியராயிருந்த P. S. சுப்பிரமணிய சாத்திரியார், தாம் எழுதியுள்ள `An Enquiry into the Relationship of Sanskrit and Tamil' என்னும் சுவடியில், இருக்கு, தைத்திரியம் (எசுர்ப்பிரிவு), அதர்வம் என்னும் வேதங்களைச் சேர்ந்த பிராதிசாக்கிய நூற்பாக்களைச் சில